கிரிஞ்ச் அவார்டு கொடுத்த விக்ரமன்... என்கிட்ட இந்த பாச்சாலாம் பலிக்காது... திருப்பி அடித்த அசீம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த டாஸ்க்கில் முதலிடம் வரும் போட்டியாளர் நாமினேஷனில் கலந்துகொள்ளாமல் இறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம்.
இதுவரை நடந்துமுடிந்த டாஸ்குகள் அடிப்படையில் அமுதவாணன் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இறுதியாக நடைபெற்று வரும் பிக் பாஸ் கிரிட்டிக்ஸ் அவார்டு டாஸ்க்கில் விக்ரமன் - அசீம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 89வது நாள்

பிக் பாஸ் 89வது நாள்

அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 13வது வாரத்தின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 13 பேர் வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து மீதமிருக்கும் எட்டு போட்டியாளர்களுடன் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்தது. அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, மைனா ஆகியோர் விளையாடினர். இதில் அமுதவாணன் அதிகமான டைல்ஸ்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

பிபி கிரிட்டிக்ஸ் அவார்டு

பிபி கிரிட்டிக்ஸ் அவார்டு

இதனைத் தொடர்ந்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்று நிறைவு பெறுகிறது. அதன்படி இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில், பிபி கிரிட்டிக்ஸ் அவார்டு டாஸ்க் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பட்டங்களுக்கும் யார் பொருந்துவார்கள் என தேர்ந்தெடுக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்த பட்டத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கிரீடத்தை அவரின் தலையில் சூட வேண்டும். அதன்படி முதல் ப்ரோமோவில் அநியாயத்தை பார்த்து பொங்குபவர் என்ற பட்டத்தை விக்ரமனுக்கு சூடுகிறார் ஷிவின். அடுத்து விஷ பாட்டல் என்ற பட்டத்தை ஷிவினுக்கு சூட்டுகிறார் அசீம். மேலும் மிக்சர் சாப்பிடும் போட்டியாளர் என்ற பட்டத்தை கதிரவனுக்கு சூடுகிறார் விக்ரமன். அதேபோல், கதிர், ஏடிகே ஆகியோரால் கொடுக்கப்படும் பட்டங்களை ஏற்க முடியாது என அசீம் தூக்கி வீசுகிறார்.

பூமர் அங்கிள் விக்ரமன்

பூமர் அங்கிள் விக்ரமன்

அதற்கு அடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பூமர் அங்கிள் என்ற அவார்டை விக்ரமனுக்கு கொடுக்கிறார் அமுதவாணன். அதனை ஏற்க மறுக்கும் விக்ரமன் அமுதவாணனிடம் விவாதம் செய்கிறார். இதனை அக்செப்ட் பண்ணல, ஆனா இந்த கிரீடத்தை மாட்டிக்கிறேன் எனக் கூறுகிறார். இந்த பூமர் அங்கிள் என்பதற்கான அனைத்து தகுதிகளுக்கும் எதிரானவன் நான். நீங்கள் புரிதலே இல்லாமல் இந்த அவார்டை எனக்கு தந்துள்ளதாக விக்ரமன் விளக்கம் கொடுக்கிறார்.

அசீம்க்கு கிரிஞ்ச் அவார்டு

அசீம்க்கு கிரிஞ்ச் அவார்டு

இதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அசீம்க்கு கிரிஞ்ச் அவார்டு கொடுக்கிறார் விக்ரமன். தொடர்ச்சியாக எல்லோரையும் டிரிக்கர் செய்து விளையாடுவது கிரிஞ்சாக தான் இருக்கிறது என விளக்கம் கொடுக்கிறார் விக்ரமன். ஆனால் அதனை ஏற்காமல் மேடையில் இருந்து இறங்கும் அசீம், உங்களுக்கு அப்படி கிரிஞ்சா தெரிஞ்சா அத நீங்களே மாட்டிக்காங்க. இதெல்லாம் நீங்க வேற ஆள்கிட்ட பேசலாம், என்கிட்ட இந்த பாச்சாலாம் பலிக்காது. இத அப்படி நீங்களே மாட்டிக்கோங்க. சப்பைக்கும் கிரிஞ்சுக்க்ம் நீங்க தான் என சூடாகிறார் அசீம். இதற்கு விக்ரமன் விளக்கம் கொடுக்க வந்தாலும் அவரை பேசவிடாமல் வழக்கம்போல தனது அதிரடியை காட்டுகிறார் அசீம். இதனை பார்த்த ரசிகர்கள் அசீம் இன்னும் திருந்தவே இல்லை என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X