Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கடைசி வாரம் அதிரடி காட்டும் கதிர்... அடங்க வைத்த ஷிவின்... இதுதானா பாஸ் உங்க டக்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறது.
13 வாரங்களை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் சீசன் 6, தற்போது 14வது வாரத்தின் தொடக்கத்தில் உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
அதேநேரம் ஓட்டுகள் அடிப்படையில் அமுதவாணனை விட அதிகமான வாக்குகள் பெற்றிருந்த ரச்சிதா வேறு வழியே இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
துணிவு
ப்ரீமியர்
பார்த்த
ஷாலினி..
செம
ஹாப்பி..
கண்டிப்பா
படம்
பிளாக்பஸ்டர்
தானாம்
பாஸ்!

பிக் பாஸ் 92வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இன்று 14வது வாரத்தின் ஆரம்பத்தில் உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், ஏறகனவே 13 பேர் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் நேற்று ரச்சிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டுள்ளார். இறுதிச் சுற்றில் அவருக்கும் மைனா நந்தினிக்கும் இடையே போட்டி நிலவியது. ஆனால், ரச்சிதா குறைவான வாக்குகளுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து இந்த வாரம் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

எவிக்சன் நாமினேஷன் தொடங்கியது
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி எவிக்சன் நாமினேஷன் ப்ராசஸ் இன்று தொடங்கியது. 14வது வாரத்தின் முதல் நாளான இன்று 7 போட்டியாளர்களும் லிவிங் ஏரியாவில் அமர்ந்து தங்களது நாமினேஷன் யார் என்று அவர்கள் முகத்தில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். அதன்படி இன்றைய முதல் ப்ரோமோவில் ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் மூவரும் அசீமை நாமினேட் செய்கின்றனர். அதற்கு அவர்கள் மூவருமே அசீம் எப்போதும் கோபமாக பேசுவதையும் மற்றவர்களை தரம் தாழ்த்துவதையுமே காரணமாக கூறுகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோ
அதே ப்ரோமோவில் இறுதியாக வரும் அசீம், நான் இப்போ நாமினேட் பண்ணப் போறது விக்ரமன் கிடையாது. என்னவிட அவர் பொறுமையாவும் தன்மையாவும் பேசுவதாக அசீம் விளக்கம் கொடுக்கிறார். ஆனால் அசீம் யாரை நாமினேட் செய்தார் என்பது முதல் ப்ரோமோவில் வரவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டவாது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஷிவினை நாமினேட் செய்யும் கதிர், டாக்கிங் மட்டும் அதிகமா பீல் பண்ண காரணத்துக்காக ஷிவினை நாமினேட் செய்வதாகக் கூறுகிறார்.

கதிரை அடங்க வைத்த ஷிவின்
இதற்கு எதிர்வாதம் செய்யும் ஷிவின், "இரண்டு பேர் சண்டை போட்டுகொண்டு இருக்கும் போது, வாங்க மனசு விட்டு பேசலாம்ன்னு கூப்ட முடியாது" எனக் கூறுகிறார். அப்போது கதிர் குறுக்கிட, அதற்கு என்னை பேசவிடாம இப்போ நீங்க தான் தடுப்பதாக குற்றம் சாட்டுகிறார். மேலும், எல்லாம் முடிந்து வெளியே போனபிறகா நாம் தீர்வு தேட முடியும்?, இருக்கும் போதே பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும். அதனை முதலில் கத்துக்கோங்க, எதையும் அவாய்ட் பண்ணக் கூடாது என கதிரை பேசவிடாமல் தடுக்கிறார். ஷிவினின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.