Don't Miss!
- News
வேகமாக 'யூ டர்ன்'.. 500 அடி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்த பஸ்.. 40 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்!
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ராஜமரியாதையுடன் வீட்டுக்குச் சென்ற போட்டியாளர்... பிக் பாஸ் சீசன் 6ல் நடந்த அடுத்த சர்ப்ரைஸ்
சென்னை:
அதிக
எதிர்பார்ப்புடன்
தொடங்கிய
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
அடுத்த
வாரத்துடன்
முடிவுக்கு
வரவிருக்கிறது.
முதல்
5
சீசன்களை
விடவும்
ஆறாவது
சீசன்
ரசிகர்களிடம்
பெரிய
வரவேற்பை
பெறவில்லை
என்றே
சொல்லப்படுகிறது.
அடுத்த
வாரம்
இறுதிப்
போட்டி
என்பதால்,
இந்த
வாரம்
பிக்
பாஸ்
போட்டியாளர்களுக்கு
Sacrifice
டாஸ்க்
மட்டுமே
கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேறிய
போட்டியாளர்கள்
திரும்பவும்
வீட்டுக்குள்
அடியெடுத்து
வைத்துள்ளனர்.
லைஃப்
டைம்
செட்டில்மென்ட்
தான்
போல..
அர்ஜுன்
தாஸை
காதலிக்கும்
ஐஸ்வர்யா
லக்ஷ்மி..
க்யூட்
பிக்!

பிக் பாஸ் 95வது நாள்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் அமுதா மட்டும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். அதனால் அவர் மட்டும் இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ-என்ட்ரி கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்
இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனை தவிர வேறு எந்த டாஸ்க்கும் நடைபெறவில்லை. முதல் நாளில் பிக் பாஸ் பிரபலங்கள் அமீர், சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டினர். அடுத்ததாக விஜே பார்வதி, விஜே ஷோபனா இருவரும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக இந்த சீசனில் எவிக்சனான போட்டியாளர்கள் திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். அதன்படி ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, ஜிபி முத்து ஆகியோர் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

மீண்டும் ஜிபி முத்து அட்ராசிட்டி
இந்நிலையில் இன்று முதல் ஆளாக தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். அவரிடம் இருந்த பாம்-இல் ஒரு Sacrifice டாஸ்க் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் அமுதவாணனின் தலை முடியை கலரிங் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனையடுத்து அமுதாவின் தலைமுடியை மஞ்சள் நிறத்தில் கலரிங் செய்துவிடுகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். இதனைப் பார்த்த ஜிபி முத்து அமுதவாணனின் தலைமுடியை பார்த்து கலர் கோழிக்குஞ்சு மாதிரி இருப்பதாக கிண்டல் செய்கிறார். நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததில் இருந்தே ஜிபி முத்துவின் அட்ராசிட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜமரியாதையுடன் என்ட்ரி
இந்நிலையில், 95வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கன்ஃபெஷன் ரூமில் இருந்து பிக் பாஸ் மாதிரி பேசுகிறார் மணிகண்டன். மைனா, ஏடிகேவை அவர் பாராட்டுவதை வைத்து, அது மணிகண்டன் தான் என ஹவுஸ்மேட்ஸ் கண்டுபிடிக்கின்றனர். அப்போதும் பிக் பாஸ் மாதிரியே பேசும் மணிகண்டன் ஸ்டோரில் இருக்கும் பூக்களை எடுத்து வந்து ராஜமரியாதையுடன் வரவேற்க வேண்டும் என கட்டளையிடுகிறார். அதன்படி ராஜமரியாதையுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார் மணி. மேலும் தான் வெளியே போனதில் இருந்து பிக் பாஸ் பார்க்கவே இல்லையென அவர் சொன்னது ரசிகர்களிடம் ஷாக்கிங்காக அமைந்துள்ளது.