பிக் பாஸ் வீடா இது... என்னங்கய்யா எல்லாரும் இப்படி மாறிட்டாங்க... நம்பவே முடியல!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட பிக் பாஸ் வீட்டில் இப்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே டைட்டில் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் யார் எவிக்சன், யார் பெட்டியோடு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீடு மாறியுள்ள வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ்

இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ்

விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னரான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 14 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் அமுதா பினாலே டிக்கெட்டை வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். அதனால் மீதமிருக்கும் 6 பேரில் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

இந்த வாரம் எவிக்சன் நாமினேஷன் முடிந்ததும் அமீர், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜே பார்வதி, விஜே ஷோபனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர். அதன்பின்னர் இந்த சீசனில் எவிக்சனான ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, சாந்தி, ஜிபி முத்து தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் ரீ-என்ட்ரீ கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தும் விளையாடியும் வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு, ஆனந்தம் விளையாடும் வீடாக மாறியுள்ளது.

ஒரே பாராட்டு மழைதான்

ஒரே பாராட்டு மழைதான்

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 95வது நாளுக்கான 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கதிருக்கு பிக் பாஸ் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிக் பாஸ் சீட்டில் அமர்ந்து ஹவுஸ்ட்மேட்ஸ்களிடம் கேள்வி கேட்கிறார். அதில், யார் இந்த வீட்டின் பெஸ்ட் என ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார். முதலில் வரும் ஏடிகே, மைனாவை பெஸ்ட் என கூறுகிறார். எப்போதும் Positive Human Being உடன் ஒருவரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என விளக்கம் கொடுக்கிறார்.

விக்ரமன் - அசீம் நட்பு

விக்ரமன் - அசீம் நட்பு

அதன்பின்னர் வரும் விக்ரமன், அசீம் தான் பெஸ்ட் என கூறுகிறார். சில நேரங்களில் அவர் காட்டக் கூடிய அன்பு, அவருடைய பேச்சுத் திறமை, எந்த இடத்திலும் சோர்ந்துவிடாமல் 14 வாரங்களும் கடுமையான விமர்சனங்களை அவர் கடந்து வந்துள்ளார். இதற்கு ஒரு பெரிய துணிச்சல் வேண்டும் என விளக்கம் அளிக்கிறார். அடுத்து வரும் அசீமும் விக்ரமனை தான் பெஸ்ட் என்கிறார். கோபம் எந்தவிதத்துலயும் பாதித்திடக் கூடாதுங்குற மிகப் பெரிய உதாரணமா நான் பாக்குறேன் என விளக்கமளிக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இது என்ன பிக் பாஸ் ப்ரோமோவா இல்லை மெகா சீரியல் ப்ரோமோவா எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதுவரை சண்டை, போட்டி, கூச்சல், குழப்பம் என இருந்த பிக் பாஸ் வீடு இன்று அமைதியாக இருப்பது வித்தியாசமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X