பிக் பாஸ் சீசன் 6 கடைசி எவிக்சன் யார்... ஹவுஸ் மேட்ஸ்களுக்கே ட்வீஸ்ட் வைத்த கமல்

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கடைசி எவிக்சன் இந்த வாரம் நடைபெறுகிறது.
98வது நாளை எட்டிவிட்ட பிக் பாஸ் சீசன் 6, அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.

நேற்றைய எபிசோடில் அசீம், விக்ரமன் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.

அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட் டூ பினாலே மூலம் வெற்றிப் பெற்றுவிட்டதால் இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 பிக் பாஸ் 14வது வாரம்

பிக் பாஸ் 14வது வாரம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 14வது வாரத்தின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இருந்து இதுவரை 14 பேர் வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் 7 பேரில் இந்த வாரம் ஒருவர் எவிக்சன் செய்யப்படவுள்ளார். அதேநேரம் ஏற்கனவே அமுதா டிக்கெட் டூ பினாலே வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டார். மேலும், நேற்றைய எபிசோடில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் அசீம், விக்ரமன் இருவரும் சேவ் என கமல் அறிவித்துவிட்டார். இதனால் ஷிவின் கதிர், ஏடிகே, மைனா இந்த நால்வரில் யாரோ ஒருவர் தான் எவிக்சன் என்பது நேற்றே உறுதியாகிவிட்டது.

 கோபமான கமல்ஹாசன்

கோபமான கமல்ஹாசன்

அதன்படி இதுவரை கிடைத்த தகவலின் படி ஏடிகே குறைவான வாக்குகளுடன் உள்ளதால் அவர் தான் எவிக்சன் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்த பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, சாந்தி, ஜிபி முத்து, மணிகண்டன். தனலட்சுமி, நிவாஷினி, குயின்ஷி, ராம், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர். ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்த Sacrifice Task 2.O குறித்து கமல் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

 இறுதிப்போட்டியில் ஷிவின்

இறுதிப்போட்டியில் ஷிவின்

Sacrifice 2.O-வில் ஏடிகே, விக்ரமன், அமுதா, கதிர், மைனா, ஷிவின் ஆகியோருக்கு மிகவும் அலங்கோலமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அடுத்தவாரம் இறுதிப்போட்டி இருப்பதால் இதனை தவிர்த்து இருக்கலாம் என கமல் விளக்கம் கொடுத்தார். விக்ரமன் தாடி, மீசை இல்லாமலும், அமுதா, ஏடிகே முடியை அலங்கோலமாக வெட்டியும், ஷிவின் மேக்கப் போடாமல் இருந்ததும் பார்க்கவே நெருடலாக இருந்தது. இதனை செய்ய வேண்டாம் என பிக் பாஸ் தடுத்திருக்கலாம் எனவும் கமல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷிவினும் இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது உறுதியாகிவிட்டது.

 ஏடிகே எவிக்சன்

ஏடிகே எவிக்சன்

முதல் ப்ரோமோவில் எவிக்சன் லிஸ்ட்டில் டாப்பில் இருப்பது மைனா, ஏடிகே, கதிர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் யார் எவிக்சன் என கமல் கேட்க, மூவருமே தங்களைத் தாங்களே கூறிக்கொள்கின்றனர். இதனால் இது சரிவராது என முடிவெடுத்த கமல் எல்லோரையும் கார்டன் ஏரியாவுக்கு வர வைக்கிறார். அங்கே மூவருக்கும் பானை கட்டி தொங்கவிட, அவைகளை மூன்று பேரும் ஒரேநேரத்தில் உடைக்க வேண்டும் என்கிறார். அப்போது அதில் இருந்து யார் மீது சிவப்பு ரோஜா விழுகிறதோ அவரே எவிக்சன் எனக் கூறி ட்வீஸ்ட் வைத்துள்ளார். ஆனால் அந்த பானைகளில் யாருக்கு சிவப்பு ரோஜா இருந்தது, யார் எவிக்சன் ஆனார் என இன்று இரவு தெரியவரும். ஆனாலும் இதுவரை கிடைத்த தகவல் படி ஏடிகே எவிக்சன் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X