பெண்கள் படைத்தலைவன் கோலாரை பசங்களோட கோர்த்து விட்டீங்களே.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், நடனப்போட்டி நடைபெறுகிறது. இதில், மெட்டி ஒலி சாந்தி ராபர்ட் மாஸ்டருடன் நடன போட்டிக்கு சவால் விட்டுள்ளார்.
திறமையான நடனக்கலைஞரான சாந்தி, ராபர்ட் மாஸ்டருடன்போட்டி போடுகிறார். சாந்தி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருமே டஃப் போட்டியாளர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்கே இது நியாயமா
இதில் அசல் கோலார் ராம் ராமசாமியுடன் கருத்தவன்லாம் கலிஜாம் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், பெண்கள் படைத் தலைவன் கோலாரை இப்படி பசங்களோட கோர்த்து விட்டீங்களே. இது உங்களுக்கே நியாயமா பிக்பாஸ் என கேட்டு வருகின்றனர்.

பழைய ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஸ்டினி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால், இதில் இதை எல்லாத்தையும் நாங்கள் பார்த்து விட்டோம் புதுசு போல ஏன போடுறீங்க என்பது போல ஒரு நெட்டிசன், Old Promo பதிவிட்டு, இந்த பொழப்புக்கு என நாய் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். என்ன காரணம்

எந்த அடிப்படையில்
இந்த நிகழ்ச்சி (பிக் பாஸ் 6) சாதாரண மக்களுடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சாதாரண மக்கள் யாரும் இல்லை என்று உறுதியாகி உள்ளது. மேலும், அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என தெரியவேண்டும் என கேட்டுள்ளார்.

பழைய எடிட்டர் போல
நேற்று பார்த்த எபிசோடே இன்றைய ப்ரோமோவில் வந்து இருப்பதைப் பார்த்து டென்ஷன் ஆன ஒரு இணையவாசி, இந்த சீசன்ல பழைய எடிட்டர் இல்ல போல, ஆபீஸ்க்கு தண்ணி பாட்டில் போட வந்த எவனையோ உக்கார வச்சு வேலை செய்ய சொல்லிரூக்காங்க போல என பதிவிட்டுள்ளார்.

வேற லெவல் டான்ஸ்
இந்த சீசனின் ஸ்டார் ஜிபி முத்து மணியுடன் டான்ஸ் ஆடுவதை பார்த்த ஜிபி முத்து வெறியர்கள் GP முத்து ADKக்கு இடையே மராத்தான் டான்ஸ் வேறலெவல். இந்த போட்டியில் ஜிபி முத்து வென்று 400 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











