இன்று வெளியேறுவது யார்? ஆயிஷாவா? ஜனனியா?...கமல் வைத்த ட்விஸ்ட்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறி ரசிகர்களிடம் ஆவலை தூண்டி உள்ளார்.

இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல் அறிவித்து இருந்தார். அப்போதாவது போட்டியாளர்கள் சிறப்பாக ஏதாவது செய்கிறார்களா என எதிர்பார்த்தால் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை.

நேற்று ராம் வெளியேறி உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் அனைவருக்கு பிடித்தமான நிகழ்ச்சி எது என்றால், அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிக ரசிகர்கள் இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது 6 சீசனிலும் வெற்றிகரமாக 60 நாட்களை கடந்து விட்டது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டை, காதல், ரொமான்ஸுக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. இப்போது யார் கண்பட்டதோ தெரியவில்லை, ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய பிறகு நிகழ்ச்சி சுவாரசியமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது

ஜனனியா..ஆயிஷாவா

ஜனனியா..ஆயிஷாவா

இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். இதில், குறைந்த வாக்குகளை பெற்ற ராம் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, அடுத்த டேஞ்சர் ஜோனில் ஜனனி மற்றும் ஆயிஷா இருக்கிறார்கள் இதில் யார் வெளியேறுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

யார் வெளியேறுவார் ?

யார் வெளியேறுவார் ?

இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நம்ம ஆண்டவர் எவிக்ஷன் கார்டுடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இதையடுத்து, இங்கு வரப்போவது யார்? ஆயிஷாவா? ஜனனியா? கமல் கேட்கிறார். இதற்கு பதில் அளித்த ஜனனி இவ்வளவு நாள் நான் கடின உழைப்புடன் இருந்தேனா, இல்லை லக்கால்தான் இருந்தேன் என்றால் வெளியில் வர சம்மதம் என்றார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

இதையடுத்து, பேசிய ஆயிஷா, வெளியில் போவது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் சார், ஏன் என்றால் கேம் கடுமையாக போய்க் கொண்டு இருக்கிறது இதனால் நான் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து கார்டை மக்களிடம் காட்டிய கமல், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக் பாஸ் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X