Don't Miss!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- News
சட்டைல தேசியக்கொடியைக் குத்திட்டு வரச் சொன்னா.. நீங்க என்ன ‘கொடி’ படத்தை குத்திட்டு வந்திருக்கீங்க
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கொஞ்சம் கூட வெட்கமே இல்ல.. தனலட்சுமியிடம் வாங்கி கட்டிக்கொண்ட அமுதவாணன்..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : அறிவுரை சொல்லுகிறேன் என்று தனலட்சுமியிடம் வசமாக வாங்கிகாட்டிக்கொண்டார் அமுதவாணன்.
தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அமுதவாணன் இதெல்லாம் உங்களுக்கு தேவையான என கேள்வி கேட்டு வருகின்றனர்.
பலருக்கு அமுதவாணனை பிடித்திருந்தாலும், சிலருக்கு அமுதவாணனை பிடிக்காததால் அவருக்கு எதிராக மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.
தனலட்சுமியிடம்
வசமாக
சிக்கிய
ஷிவின்..க்ரிஞ்ச்
தனமா
இருக்கே..ப்ரோமோ
பார்த்து
கடுப்பான
ரசிகர்கள்!

அசீம் கோவத்தை குறைக்கணும்
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 65வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், எந்த குணத்தை மாற்றிக்கொண்டால் சொர்க்கத்திற்கு போகமுடியும் என, தேவதைகள் நரகத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் ரச்சித்தா அசீமுக்கு அறிவுரை கூறினார். அதில், அசீம் அவர்களே நீங்கள் டக்குனு கோவமாக பேசுவது மற்றவர்களை காயப்படுத்துகிறது. இதை நீங்கள் குறைத்துக்கொண்டால் சொர்க்கத்திற்கு போகலாம் என்றார்.

வாங்கி கட்டிக்கொண்ட அமுதவாணன்
இதையடுத்து, பேச வந்த கதிர், ஷிவின் உங்க கருத்தையெல்லாம் முன் வைக்குறீங்க, ஆனால், அதை கத்தி சொல்வதால் அது சண்டையாகி விடுகிறது என்றார். அதன் பிறகு வந்த அமுதவாணன், தனலட்சுமி கோவத்தை மட்டும் கன்ட்ரோல் செய்தால், நிச்சயமாக சொர்க்கத்திற்கு போவார்கள் என்றார். அமுதவாணன் பேசிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்ட தனலட்சுமி, நான் தேவை இல்லாத விஷயத்திற்கு கோவப்படுவதை குறைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுக்கு மேலையும் கோவப்படக்கூடாது என்றால், நான் அமுதவாணன் போலத்தான் இருக்கணும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இரண்டாவது ப்ரோமோவிலும் அமுது
முன்னதாக காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஜனனி மற்றும் தனலட்சுமிக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி என கேட்க அமுதவாணனிடம் சண்டைபோடுகிறார் அசீம். அந்த ப்ரோமோவிலும் தனலட்சுமி அமுதவாணனை வம்பு இழுத்து பேசி உள்ளார்.

அமுதவாணன் டார்கெட்
இந்த இரண்டு ப்ரோமோவையும் பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள், இன்றைய எபிசோடின் டார்கெட் அமுதவாணன் தான் என்றும், அமுது ஜனனியை விட்டு மற்றவர்களை பார்த்தால் நன்றாக இருக்கும் ஆனால், அமுது அதை செய்ய மாட்டார் என்று இணையத்தில் பல நெட்டிசன்கள் அவர் திட்டி தீர்த்து வருகின்றனர்.