Don't Miss!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- News
வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுக்கூட தெரியலையா? சரியான முட்டாளா இருக்காங்களே..பிக் பாஸ் போட்டியாளரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களின் பொது அறிவைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து போனார்கள்.
அக்டோபர் 9 ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 66 நாட்களை எட்டி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன், டாஸ்க், சண்டை என அனைத்திலும் சிக்கி ஒரு வழியாக 65 நாட்களை கடந்து விட்டார்கள்.
8 பேர் வெளியேறி உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
வாரிசு 'ரஞ்சிதமே’ பாட்டுக்கு டான்ஸ்.. குயின்ஸி, ஷெரினாவை பங்கமாக கலாய்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

புதுவிதமான டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சொர்க்கம், நரகம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் சிலருக்கு ஏஞ்சல் போன்ற உடையும், சிலருக்கு நரகவாசி உடையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நரகத்தில் இருப்பவர்கள் சைக்கிளில் அதிக பெடல் செய்தால் சொர்க்கத்திற்கு வந்துவிடலாம், மேலும், நரகவாசிகள் தந்திரமாக சிறையை திறந்து திருட்டுத்தனமாகவும் சொர்க்கத்திற்கு வந்து விடலாம்.

என்ன டாஸ்க் இது
இந்த டாஸ்க்கில் நரகவாசியாக இருந்த விக்ரமன் தொடர்ந்து அரைமணி நேரம் சைக்கிளில் பெடலிங் செய்து சொர்க்கவாசியாக மாறிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல டாஸ்க் கடுமையாக இருக்கும் என்று பார்த்தால், கடந்த வார டாஸ்க்கைவிட இந்த டாஸ்க் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது.

என்ன கொடுமை சார் இது
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் 10 வயது குழந்தைகளின் அறிவுத்திறமை மேட்ச் பண்ண வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில், மைனாவிடம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு அவர் 18 என பதில் கூறியுள்ளார்.

என்னடா இதெல்லாம்
அதன் பின் தனலட்சுமியிடம் இந்தியாவின் தேசிய விலங்கு என்ன என கேள்வி கேட்கப்படுகிறது இதற்கு அவர் சிறுத்தை என பதில் அளித்துள்ளார். அசீமிடம் ஓடிவிளையாடு பாப்பா அடுத்த 3 வரிகளை சொல்லுங்க என்று கேட்க திருதிருவென்று எல்கேஜி குழந்தை போல முழித்துக்கொண்டு நிற்கிறார் அசீம். இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், கதிரவனிடம் ஆத்திச்சூடியின் முதல் 5 வரிகளை பிக் பாஸ் கேட்க, கதிர் கொஞ்சம்கூட யோசிக்காமல், விஜய் ஆண்டனி இசையமைத்த ஆத்திச்சூடி என்ற ரேப்பாடலை பாடி பிக் பாசையே மிரள விட்டுவிட்டார்.

இது கூட தெரியலையா?
இந்த ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், ஆத்திச்சூடி தெரியலை பேசிக் ஜெனரல் நாலேஜ் கூட இல்லை என்றும், தமிழ் புலவர் என்று மார்த்தட்டிக் கொண்ட அசீமுக்கும் ஒடிவிளையாடு பாப்பா பாடல் கூட தெரியவில்லையா? பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் அடி முட்டாளா இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.