Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவங்களெல்லாம் போட்டியாளரா? சரியான முட்டாளா இருக்காங்களே.. விளாசிய நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை பார்த்து டென்ஷனான ரசிகர்கள் போட்டியாளர்களை திட்டிதீர்த்து வருகின்றனர்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடைபெற்றது.இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.
இதில், அமுதவாணன், அசீம் இருவரும் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் சீசன் 6: விக்ரமன், அசீம், ஷிவினை சும்மா வச்சு செய்யும் மீம்ஸ்.. வெல்லப் போவது யாரு?

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம், லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில், பத்து வயது மாணவனின் பாடபுத்தகத்தில் வரும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், மைனாவிடம் தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று கேள்விக்கு 18 என்றார். தேசிய விலங்கு எது? என்ற கேள்விக்கு சிறுத்தை என்று கூறி தனலஷ்மி செம மொக்கை வாங்கினார்.

சரியான நோஸ் கட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், உங்க லக்ஸரி டாஸ்க் பார்த்ததும், என்னுடைய பயம், தாழ்வு மனப்பான்மை சற்று உயர்ந்துவிட்டது என போட்டியாளர்களை கிண்டலடிக்கும் வகையில் கமல் பேசினார். பாரதி எழுதுன மற்றொரு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். ஆனால், இந்த பாடலை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் அசீம். அப்போது குறுக்கிட்டு பேசிய கமல் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு வேற கேள்விக்கு பதில் சொல்றீங்க என்று சிரித்துக்கொண்டே நோஸ் கட் கொடுத்தார்.

சரியான முட்டாளா இருக்காங்களே
இதையடுத்து, மைனா ஓடி விளையாடு பாப்பா பாடலை தப்பு தப்பா பாட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போன கமல் ஆளைவிடுங்கப்பா சாமி, என்ன மாதிரியே இருக்கீங்க மைனா என்று அவரை கிண்டலடித்தார். இந்த எபிசோடைப் பார்த்த ரசிகர்கள் செம கடுப்பான நிலையில், தற்போது ப்ரோமோவை பார்த்து, இவங்களெல்லாம் போட்டியாளரா? சரியான முட்டாளா இருக்காங்களே என்றும், எல்லாருக்கும் சண்டைபோடவும் மேக்கப் போட மட்டும் தான் தெரிகிறது என்று நெட்டிசன்ஸ் விளாசி வருகின்றனர்.

வெளியேறுவது யார்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், கமல் எவிக்சன் கார்ட்டை உள்ளே வைத்து விட்டு இனி இது எல்லாம் தேவையில்லை, குடவோலை முறையில் யார் தெரிவு செய்யப்படுகின்றீர்களோ அவர்கள் பேசாமல் வெளியே வந்து விடுங்கள் எனக் கூறுகிறார். அது யாராக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர்.