மாத்தி பேசாதீங்க...மக்கள் பாத்துக்கிட்டு இருக்காங்க..அசீமால் கடுப்பான தனலட்சுமி!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், வழக்கம் போல சண்டைக்கோழிகளான அசீமும், தனலட்சுமியும் காரசாரமாக பேசிக்கொள்கின்றனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஏடிகே, மைனா, ஷிவின், கதிரவன், அமுதவாணன், ரச்சித்தா ஆகியோர் இருக்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நிலையில் இருந்த சுவாரஸ்யம் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு சில பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அசீம், விக்ரமன், தனலட்சுமி போன்ற போட்டியாளர்கள் அவ்வப்போது ஏதாவது சண்டை போட்டு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர்.

வெளியேறினார்
ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சி 70 நாட்களை எட்டிய பின்பும் சும்மாவே இருப்பதாக ரசிகர்களால் குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் மணிகண்டன், கதிரவன், ரச்சித்தா ஆகியோர் அடங்குவார்கள். ஏனென்றால் ரசிகர்கள் அனைவரும் ADK தான் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், குறைவான வாக்குகளை பெற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜனனி வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அசீமிடம் கேள்வி கேட்ட தனம்
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில் தனலட்சுமி அசீமிடம், ஜனனி உள்ள போனதுக்கு நீங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க, அவ உள்ள போகணும் என்று நான் நினைச்சேன் அதனால இரண்டு பேரையும் ஹோல்ட் பண்ணி விட்டு அவளை உள்ள போக வச்சேன் என்று தானே சொன்னீங்க எனக் கூறுகின்றார்.

மக்களுக்குத் தெரியும்
அதற்கு அசீம் அப்படி நான் சொல்லவே இல்லையே என அதட்டுகின்றார். அதற்கு ஷிவினும், தனலட்சுமியும் ஜனனி உங்களுக்கு கை கொடுத்து அழுதிட்டு போகும் போது நீங்க சொல்லலையா எனக் கேட்கின்றனர். அசீம் உடனே அதற்கு ஷிவின் தேவை இல்லாமல் என் பெயரை இதில் ஏன் இழுக்கிறார்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, தனம் வெளியே எல்லாருமே பார்த்திட்டு இருக்காங்க எனக் கூறிச் செல்கின்றார்.

ஓப்பன் நாமினேஷன்
முன்னதாக காலையில் வெளியான ப்ரோமோவில், அந்த வாரமும் ஓஃபன் நாமினேஷனே நடக்கிறது. இதில், தனம் சரியான அரக்க குணம் கொண்டவர் போல நடந்து கொண்டார் என்று ஏடிகே, விக்ரமன் கூறியுள்ளனர். போட்டியாளர்கள் அனைவரும் முகத்திற்கு நேராகவே உண்மைக் காரணங்களை கூறி நாமினேட் செய்தனர்.


Click it and Unblock the Notifications











