Don't Miss!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- News
திடீரென உயரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு.. உ.பி-யில் ஒருவர் பலி!
- Lifestyle
இந்த 4 செடிகளில் ஒன்று உங்க வீட்டில் இருப்பது அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருமாம்!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போதும் முடியல ..அழுதுடுவேன்..பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் 80ஸ் கல்லூரி போல பிக் பாஸ் வீடு மாறி உள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கனாக்காணும் காலமாக டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இரு பிரிவாக பிரிந்து அலப்பறை கொடுத்து வருகின்றனர்.
இந்த டாஸ்கை ரசிக்கும் படி செய்தவர் அசீம் தான், இவர் பள்ளி மாணவன் போல தனலட்சுமிக்கு காதல் கடிதம் கொடுத்தது, தனலட்சுமியை வழிமறித்து பேசியது ரசிக்கும் படி இருந்தது.
டயலாக் எழுதி கொடுத்தா கூட பேசுவாங்களான்னு தெரியலையே.. பிக் பாஸ் சீசன் 6ஐ வெளுத்து வாங்கிய வனிதா!

சொந்தக்கதை சோகக்கதை
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதினார்கள். அதில் ஷிவின் மற்றும் ரச்சித்தாவின் கடிதத்தை கேட்டு ரசிகர்கள் கண்ணீர் வடித்தார்கள். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ரசித்தா நேற்று தனது மனதில் புதைத்துவைத்த சோகத்தை எல்லாம் அந்த கடிதத்தில் கொட்டித்தீர்த்து கதறி அழுதார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

80ஸ் கல்லூரி
நேற்று அழுகாச்சியாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 80ஸ் கல்லூரியாக மாறி உள்ளது. பேராசிரியர்களாக விக்ரமன், டான்ஸ் மாஸ்டராக அமுதவாணன் மற்றும் கதிர் ஆகியோர் நிகழ்ச்சியை என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இல்லாமல் கொண்டு செல்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ரச்சித்தா அழுதவாணனிடம் நடனம் கற்று வருகிறார். இதில், பேராசிரியராக இருக்கும் விக்ரமன் ரச்சிதாவுக்கு, உங்களுக்கு நல்ல திறமை இருக்கு எனக்கூறி நீங்க டான்ஸ் கத்துக்கோங்க என சொல்கிறார். உடனே ரச்சிதாவும், அமுதவாணனிடம் சென்று டான்ஸ் கற்றுக் கொண்டு ஆட ஆரம்பித்துள்ளார்.

முடியல அழுதுடுவேன்
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி, ஏற்கனவே இரண்டாவது ப்ரோமோ இரண்டு மணிநேரம் லேட்டா வந்துச்சு இதுல இப்படி ஒரு மொக்கையா என்றும், கடந்த சீசனிலேயே இந்த டாஸ்க் செம கடுப்பாக இருந்தது. இந்த சீசனிலும் அதே மாவுதானே புதுசா கொஞ்சம் யோசிங்க பாஸ் முடியல ..அழுதுடுவேன் என பதிவிட்டுள்ளார்.