ச்சீ..இதெல்லாம் என்ன புத்தியோ..எவ்வளவு திட்டியும் திருந்தாத அசீம்..விளாசிய கமல்ஹாசன்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் அசீமை கடுமையாக திட்டிதீர்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த சீசனில் நடந்ததைப் போல இந்த சீசனிலும், பிபி ஆரம்பப் பள்ளி, 80ஸ் கல்லூரி என பலவிதமான டாஸ்க் இருந்தது.
இந்த டாஸ்கில் அசீம், ஏடிகே, மணிகண்டா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்திருந்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் நேற்று ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் ஒன்று முதல் 10 வரை இருந்த எண்ணில் போட்டியாளர்கள் நின்று தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் முதல் இடத்தில் நின்ற அசீமிடம் மைனா,ஷிவின்,தனலட்சுமி, விக்ரமன் அனைவரும் முதல் இடத்தில் உங்களுக்கு நிற்க தகுதியே இல்லை என்று கூறி விவாதம் செய்தார்கள்.

கட்டப்பஞ்சாயத்து செய்யாதீங்க
யாருடைய பேச்சையும் கேட்காத அசீம், விக்ரமனை கட்டப்பஞ்சாயத்து செய்து பழக்கமாகிவிட்டதா என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் உங்க வேலையா என்றும், கண்டபடி விமர்சனம் செய்தார். அசீம், தரம் தாழ்ந்து அடுத்தவர்களுக்கு கோவம் வரும் வகையில் பேசிய போதும், விக்ரமனன் கொஞ்சமும் தரம்தாழ்ந்து பேசவில்லை.அசீம் இவ்வாறு பேசியது பலரை கடுப்பாக்கினாலும், அது குறித்து யாரும் தட்டிகேட்கவில்லை.

எனக்கு பொறுமை இல்லை
இந்நிலையில், காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் உங்கள் புரிதல் என்ன என அசீமிடம் கமல் கேட்கிறார். உதாரணமாக சொன்ன ஒரு விஷயம் எப்படி கட்டப்பஞ்சாய்த்தாகும் என்றும், இதற்கு மேலே உங்களிடம் வாதாட என்னிடம் பொறுமை இல்லை என்றும் ஆசீமை கடுமையாக அசீங்கப்படுத்தினார்.

திருந்தா அசீம்
இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அசீம் மாதிரி ஒரு ஆளை நீங்கள் வெளியில் சந்தித்தால், எப்படி நடந்து கொள்வீர்கள் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்கிறார். அதற்கு தனலட்சுமி கண்டிப்பா நான் அவர் பக்கம் போகவேமாட்டேன் என்றார். இதையடுத்து பேசிய மைனா போடா என்று சொல்லிவிட்டு போய்விடுவேன் என்றார்.

சரியான நோஸ் கட்
அடுத்து வந்த மணிகண்டன், கண்டிப்பா தட்டி கேட்பேன் சார் என்று சொல்ல, வீட்டில் தட்டிக்கேட்காத நீங்களா வெளியில் கேட்பீங்க என்று மணிகண்டனுக்கு சரியான நோஸ் கட் கொடுத்தார். உடனே, மணிகண்டன் இல்ல சார், டாஸ்க் முடிஞ்சதும் அசீம் வேற முகம் காட்டுகிறார் என்றார். இதனால் தான் சொல்கிறேன் நீங்கள் உங்களுக்குள் விளையாடாமல் எங்களை வைத்து விளையாடுறீங்க என்று கமல் கூறுகிறார்.

இதெல்லாம் என்ன புத்தி
இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் அசீமை எத்தனை முறை திட்டினாலும், எத்தனை வாய்ப்பு கொடுத்தாலும், அவர் திருந்தவே மாட்டார். அவர் செய்வது, பேசுவதுதான் சரி என்ற மனநிலைக்கொண்டவர் அசீம். ச்சீ.. இதெல்லாம் என்ன புத்தி என்று சொல்வது. ஆனால், மக்கள் எப்படி இப்படி பட்ட ஒருவருக்கு வாக்கு அளித்து காப்பாற்றி வருகிறார்கள் என்று தெரியவில்லை என இணையத்தில் புலம்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











