இப்படி பேசியே மழுப்புறீங்களே...கமலை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள், இப்படியே பேசியே மழுப்புறீங்களே என்று கமலை கிண்டலடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. இதில், 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து நிற்க வேண்டும் என கூறப்பட்டது. பர்ஸர் அடித்ததும், முதலில் ஓடிவந்த அசீம் முதல் இடத்திற்கு பிரச்சனை ஆரம்பமானது.
ஷிவின் மற்றும் விக்ரமன் தாங்கள் நேர்மையாக விளையாடியிருக்கிறோம், யாரையும் நாங்கள் தரக்குறைவாக பேசியது இல்லை. இதனால், முதல் இடம் எங்களுக்கு தான் சரியாக இருக்கும் என்றனர்.

கொந்தளித்த விக்ரமன்
இதையடுத்து, பேசிய அசீம் முதல் இடத்தை, நிச்சயம் யாருக்கும் கொடுக்க மாட்டேன். அப்படியே கொடுக்க வேண்டும் என்று சொன்னால், அமுதவாணன், மணிகண்டன், எடிக்கே போன்றவர்களுக்கு மட்டும் தான் கொடுப்பேன் என்று சொன்னார். அதன் பின் விக்ரமனுக்கும் அசீமுக்கும் வாக்குவாதம் முற்றிய போது விக்ரமனை கண்டபடி விமர்சித்தார் அசீம்.

மூஞ்சிய பாரு
இதையடுத்து ஷிவின் மற்றும் அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா என்று அசீம் ஷிவினை மிகவும் தரக்குறைவாக பேசினார். எவ்வளவு நேரம் பேசியும் அசீம் விட்டு கொடுக்காததால், ஷிவின் 9வது இடத்திற்கும், விக்ரமன் 10வது இடத்திற்கும் சென்று நின்றனர். ஷிவினை இப்படி தரை குறைவாக பேசிய அசீம் பேசியதை விஜய் டிவி மற்றும் ஓடிடியில் 1 மாணிநேர காட்சியில் காட்டவில்லை.

கண்டு கொள்ளாத கமல்
இதையடுத்து,நேற்றைய எபிசோடில் அசீமை, கமல் கடுமையாக விமர்சித்தார். எவ்வளவு தான் திட்டினாலும், அதை தட்டிவிட்டுவிட்டு சென்று விடுகிறீர்கள். இனி உங்களிடம் பேச எனக்கு பொறுமை இல்லை என்றார். அதன்பின் கேம் ஒவர் பட்டத்தையும் பல போட்டியாளர்கள் அசீமுக்கு கொடுத்தார்கள். எவ்வளவு தான் அசீமை கமல் திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வேதே இல்லை.

இரண்டாவது ப்ரோமோ
இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோவில், நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை துணிச்சலாக குழந்தை மொழியில் சொல்லலாம் என்று கமல் சொல்ல, விக்ரமன் குழந்தை மொழியில் வணக்கம் அண்ணா, எது சொன்னாலும் அசீமுக்கே சப்போர்ட் பண்றான் மணி, நானும் உன் பிரண்ட் தானே என கேட்கிறார். இதே போல ஒவ்வொரு போட்டியாளர்களும் குழந்தை மொழியில் பேசுகின்றனர்.

இப்படி பேசியே மழுப்புறீங்கள்
இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் போன வாரம் முழுக்க போட்டியாளர்கள் இப்படித்தான் பேசி பேசி கொடுமைபடுத்தினார்கள் மீண்டும் இன்றைக்கும் இதே கொடுமையா என்றும், இப்படியே பேசியே மழுப்புறீங்கள் கமல் சார், அசீம் வீட்டில் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்தால் மட்டும் போதுமா என்றும் கமல்ஹாசனை கேள்வி மேல் கேள்வி கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











