பிக் பாஸ் ஷோக்கும் உனக்கும் தகுதியே இல்லை...கணவரால் அவமானப்பட்ட மைனா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் நீ இருக்க தகுதியே இல்லை என்று மைனா நந்தினியின் கணவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து விட்டதால், நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் டஃப் கொடுத்து, தங்களது திறமையை நிரூபிக்க கடுமையாக விளையாடி வருகிறார்கள்.

பைனல் வரைக்கும் போவார் என்று எதிர்பார்த்த தனலட்சுமி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இதனால், தனலட்சுமி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

9 போட்டியாளர்கள்

9 போட்டியாளர்கள்

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது விக்ரமன், மைனா, அசீம், ரச்சிதா, அமுதவாணன், மணிகண்டா, ஷிவின், கதிரவன் மற்றும் ஏடிகே என 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிய இன்னும், சில வாரங்களே இருப்பதால் டைட்டிலை வெல்லப்போவது யார் என தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

பிரீஸ் டாஸ்க்

பிரீஸ் டாஸ்க்

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் செம மொக்கையான டாஸ்க்குகள் நடைபெற்ற நிலையில், சுவாரசியத்தை அதிகரிக்க குடும்பத்தாரை அழைத்து வந்து ஹவுஸ்மேட்ஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருவார்கள்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினரின் வருகையை எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களை பார்த்து போட்டியாளர்கள் கண் கலங்கி நின்றார்கள். குடும்பத்தின் வருகையை பெரிதும் எதிர்பார்த்திருந்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.

லாய்க்கி இல்லை

லாய்க்கி இல்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் மைனாவின் கணவர் யோகி மைனாவை கண்டபடி திட்டி உள்ளார். அதில், பிக் பாஸ் ஷோவில் நீ இருக்கவே லாய்க்கி இல்லை, இந்த பிக் பாஸ் ஷோக்கும் உனக்கும் தகுதியே இல்லை. புரிதா..நீ அப்படித்தான் விளையாடிட்டு இருக்க. நான் சொல்வது தப்புனு எனக்கு நிரூபித்துக்காட்டு.

பயமே வேண்டாம்

பயமே வேண்டாம்

ஒரு தப்பு நடக்கும் போது அதை தட்டிக்கேக்கணும். ஆனால், நீ கேட்கவே யோசிக்கிற. அந்த பயமே வேண்டாம். நீ விளையாட்டை தைரியமா விளையாடு அப்போது தான் மக்களுக்கு யார் நல்ல விளையாடுகிறார்கள்...யார் சரியா விளையாடவில்லை என்பது தெரியும் என்று மைனா நந்தினுக்கு பிக்பாஸ் வீட்டில் ஜெயிப்பதற்கான டிப்ஸ்களை மைனாவின் கணவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X