பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்..ஒரு வேளை டிரைவர் ஜமுனா பட ப்ரமோஷனா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருவதால் போட்டியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை காண ஆவலுடன் இருக்கின்றனர். நேற்று மைனாவின் கணவர் மற்றும் மகன் வந்திருந்தார்கள். அதில்,மைனாவின் கணவர் யோகி, விளையாட்டை கவனத்துடன் விளையாடு, தப்பு நடந்தா கேள்வி கேளு என சில அறிவுரைகளை கூறினார்.

அதே போல அமுதவாணனின் மனைவி மற்றும் இரு மகன்களும் வந்திருந்தார்கள். அமுதவாணனின் மகன் ஷிவின், அசீம் விக்ரமன் போல மிமிக்கிரி செய்திருந்தார். மேலும், பெரியாரைப் போல பேசி விக்ரமன் மனதில் இடம் பிடித்தார். அமுதவாணனைப் போல அவரது மகனுக்கும் அசாத்திய திறமை உள்ளது.

கண்கலங்கிய ஷிவின்

கண்கலங்கிய ஷிவின்

ஷிவினின் தோழியும் அவரது வருங்கால கணவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். ஷிவின் அவர்களை கட்டியணைத்து வரவேற்று உன்னை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி வந்ததற்கு நன்றி தெரிவித்தார். ஷிவினின் தாய் மற்றும் சகோதரியிடம் பேசியதாகவும் அவர்கள் வர மறுத்துவிட்டதால், சண்டை போட்டு உன்னை பார்க்க வந்ததையும் அவரது தோழி வருத்தத்துடன் கூறியிருந்தார். மேலும், உன்னை நினைத்து பெருமையாக இருப்பதால் தான் இங்கு வந்தோம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

அம்மா...என் முகவரி நீ அம்மா...

அம்மா...என் முகவரி நீ அம்மா...

இதையடுத்து இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ரச்சித்தா மகாலட்சுமியின் அம்மா வந்தார். வலிமை படத்தில் வரும் அம்மா பாடலுடன் வந்த அம்மாவைப் பார்த்ததும் ரச்சித்தா பாசத்தில் கதறி அழுதார். மேலும், அம்மாவை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற ரச்சித்தா மடியில் படுத்துக்கொண்டு குழந்தை போல அழுதார்.

இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பாடலுடன் கதவு திறக்க மணிகண்டாவின் மகன், மனைவி மற்றும் அவரது அம்மா வருகிறார்கள். மகனைப்பார்த்த மணிகண்டன் மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே ஓடி முட்டியிட்டு தனது மகனை கட்டித் தழுவுகிறார். பின்னர், அவரது அம்மா மற்றும் மனைவியை நலம் விசாரிக்க, சீக்ரெட் அறையில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக் பாஸ் வீட்டிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த மணிகண்டாவைப் பார்க்க மொத்த குடும்பத்தினரும் வந்துட்டாங்க போல என்றும், ஏற்கனவே ஐஸ்வர்யா அண்ணனுக்கு வோட்டு போடுங்க என்று கேட்டிருந்தார். இப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளதால், அவரின் ஒட்டுமொத்த ரசிகர்களும், மணிகண்டனுக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

இன்னும் சில ரசிகர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் டிசம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திற்காக ப்ரோமோஷனாக கூட இது இருக்கலாம் என்றும், ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்துவிட்டார் ஐஸ் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X