Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நல்லா வேஷம் போடுறீங்க..ரச்சித்தாவின் முகத்திரையை கிழித்த அசீம்..நொந்து போன ரச்சித்தா!
சென்னை : இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் ரச்சித்தாவை அசீம் முகத்திற்கு நேராக வேஷம் போடுகிறீர்கள் என பேசி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில், இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ரச்சித்தாவை தவிர மற்ற அனைத்துப்போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், இந்த வாரம் டேன்ஜர் ஜோனில் மணிகண்டா, மைனா, கதிர் ஆகியோர் இருக்கின்றனர்.
டாப் 5ல அசீம் இல்லையா.. டைட்டில் வின்னர் இவர் தானா? மணிகண்டனிடம் ஆருடம் சொன்ன மைனா!

டைட்டிலை யார் வெல்லுவார்
பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை நடந்து விட்டது, நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. ஜனவரி 23ந் தேதிக்குள் நிகழ்ச்சி முடிந்துவிடும். இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்லப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதில், விக்ரமன் டைட்டிலை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கதிரின் காதலியா?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக மைனாவின் கணவர் மற்றும் மகன் வந்தனர். அதன்பின் அமுதவாணனின் குடும்பத்தினர், ஷிவினின் தோழி தனது வருங்கால கணவருடன் வந்திருந்தார். நேற்று கதிரவனின் அம்மா மற்றும் அவரின் தோழி வந்திருந்தார். அவர் கதிரவனின் காதலி என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை மட்டும் தைரியம் வருமா?
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், ரச்சித்தா மைக்கின் முன் அமர்ந்து, அசீம் எப்போதுமே அடுத்தவர்களை அழுக்கிவிடக்கூடிய நபராக இருக்கிறார் என்றார். ரச்சித்தாவின் பேச்சால் கடுப்பான அசீம், தயவு செய்து என்னை பற்றி அப்படி சொல்லாதீங்க நான் யாரையும் அமுக்கவில்லை. அப்படிப்பார்த்தால், சனிக்கிழமை ஆன மட்டும் ரச்சித்தாவிற்கு புதிய தைரியம் எங்கிருந்து வருகிறது.

போலியாக தெரிகிறது
கமல் சார் முன்னாடி அவ்வளவு தைரியமாக பேசும் ரச்சித்தா என்னிடம் இதைப்பற்றி இதுவரை ஒருநாள் கூட பேசியதே இல்லையே . கமல் சார் முன்னாடி மட்டும் தைரியமாக பேசும் ரச்சித்தாவை பார்க்கும் போது எனக்கு போலியாகத் தெரிகிறது என தனது மனதில் இருப்பதை முகத்திற்கு முன்னாலே சும்மா கிழிகிழியென கிழித்து உள்ளார். அசீமின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விக்ரமனுக்கு இதைவேலைதான்
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், மைனா நந்தினி அனைவருக்கும் முன்னிலையில், விக்ரம் ஒபினியன் சொல்வது எல்லோருக்கும் வேணும், ஆனால் ஒபினியன் சொல்வதையே வேலையா வெச்சுக்கிட்டு இருக்கக் கூடாது. அந்த விஷயத்தை நான் பண்ணல, ஏன்னா நான் எதார்த்தமாக இருக்கிறேன் என்றார்.