Don't Miss!
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எல்லாமே ப்ரோமோவுக்காகத்தான்..போட்டியாளர்களை வெச்சி செய்யும் கமல்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ப்ரோமோவுக்காக ஒவர் ஆட்டிட்யூட் காட்டுவது யார் என கேட்டு போட்டியாளர்களை உசுப்பேத்தி உள்ளார் கமல்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், தற்போது ஏழு பேர் வெளியேறி 14 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த வாரம் நடந்த நாமினேஷனில், கதிரவன், குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.
ஷிவினை இழுத்து கீழே தள்ளிய தனம்..WWF ரேஞ்சிற்கு சண்டை..ரணகளமான பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை என்பதால் கமலஹாசன் வருகைக்காக அவரது ரசிகர்கள் இப்போதே நிகழ்ச்சியை காண ஆர்வமாக உள்ளன. இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த நிறை குறைகளை அலசி ஆராய்வதற்காக கமலை மாஸ் லுக்குடன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சத்தம் அதிகமாகிறது
மற்ற நாட்களில் காலையிலேயே வெளியாகும ப்ரோமோ இன்று சனிக்கிழமை என்பதால் தாமதமாகவே அதாவது பிற்பகலுக்கு மேலே தான் முதல் ப்ரேமோ வெளியானது. இதில் முதல் ப்ரோமோவில் நல்ல விளையாட ஆரம்பிச்சாங்கனா சத்தமும் அதிகமாகுது, வெற்றிக்கும் சத்தத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதை இவர்களிடம் சொல்லலாமா என்றார்.

எல்லாமே ப்ரோமோவுக்காகத்தான்
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், இப்படி எல்லாம் செய்தால் தான் ப்ரோமோவில் வருவோம் என்று நினைத்துக்கொண்டு செயல்படுவது யார் என்று கமல் கேட்டார். இதில், ஷிவின், மணிகண்டன் இருவரும் தனலட்சுமி என்றனர். இதையடுத்து,வந்த அசீம், விக்ரமன் என்னிடம் அடிக்கடி ப்ரோமோவுக்கான நீங்க இப்படி செய்கிறீர்கள் என்பார் இதனால், அவர் தான் ப்ரோமோவை பற்றி அதிகம் யோசிக்கிறார். இதனால், நான் விக்ரமனை சொல்கிறேன் என்றார் அசீம்.

ஆயிஷா அழுவதே அதுக்குத்தான்
இதையடுத்து, பேசிய அமுதவாணன் ஆயிஷா எப்போதும் அழுதுகொண்டே இருப்பார். இதனால், அவர் ப்ரோமோவில் வர ஆசைப்படுவது போல எனக்கு தோன்றுகிறது என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போட்டியாளரின் பெயரை சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரோமோவில் வர ஆசைப்படுவது அசீம் தான், ஆனால் தலைவன் பெயர் இல்லாததால் அவர் தப்பித்துக்கொண்டார்.