Don't Miss!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- News
வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸில் மாஸாக பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த மணிகண்டன்.. வயிற்றெரிச்சலில் தனம்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில், மணிகண்டனின் மாஸ் பெர்ஃபார்மன்ஸை பார்த்து தனலட்சுமி வயிற்றெரிச்சலில் புலம்பி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 59 நாட்களை நெருங்கியுள்ளது.
டாஸ்க்கும் மொக்க..ப்ரோமோவும் மொக்க..ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க பாஸ்..கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

புதுமையான டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கதாபாத்திர டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரமாகவே இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல்,மற்ற போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பெர்ஃபார்மன்ஸ் செய்து காட்டவேண்டும். இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

விதவிதமான கதாபாத்திரம்
இதில், ஏடிகேவிற்கு போகானாந்தா, மைனாவிற்கு பூனை சேகர், ஷிவினிற்கு மாடர்ன் மோகினி, தனலஷ்மிக்கு மோசமணி, மணிக்கு பாலைய்யா, ரச்சிதாவிற்கு சீதா தேவி, அசிமிற்கு வக்கீல் கணேசன், ராமிற்கு தகுவரன், ஜனனிக்கு அராத்து வானதி, அமுதவாணனுக்கு எம்.ஆர்.ராதா, விக்ரமனுக்கு கன்னியன் வேடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காலையில் வெளியான ப்ரோமோவில் விக்ரமனுக்கும், ஏடிகேவுக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

இரண்டாவது ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், மணிகண்டன் டமாலு டமாலு டுமீலு டுமீலு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். மணிகண்டனின் டான்ஸ் அசீமுக்கு பிடித்துப்போக, இந்தாடா வெச்சிக்கோ என்ற கொத்தாக எடுத்து 15ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார். உடனே,மைனா என்ன அசீம் 15 ஆயிரம் தர, வாரா வாரம் இவனையே ஜெயிக்க வெச்சா எப்படி என கேட்கிறார்.

வயிற்றெரிச்சலோடு பேசிய தனம்
இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தனலட்சுமி, என் மேல ஒரு க்ரூபே காண்டா இருக்கு, நாலு பேர்கிட்ட நம்ம பகை ஆயிட்டோம் என்றால், அவங்க நமக்கு 50 ரூபாய், 100 ரூபாய் தான் தருவாங்க. நல்லா பேசுகிறோம் என்பதற்காக கொடுக்கும் காசு எனக்கு தேவையில்லை. நான் செய்யும் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து காசு கொடுத்தால் போதும் என்று, தனலட்சுமி மணிகண்டனை பார்த்து வயிற்றெரிச்சலோடு பேசி உள்ளார்.