மைனா நந்தினி கேப்டனா?அவங்களை நான் மதிக்கவே மாட்டேன்.. வயித்தெரிச்சலில் தவித்த தனம்!

சென்னை : கேப்டன் டாஸ்கில் தோற்றுப்போனதால், தனலட்சுமி வயித்தெரிச்சலில் சக போட்டியாளர்களிடம் தேவையே இல்லாமல் சண்டை போட்டு வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து 6 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த வார தலைவர் மைனா

இந்த வார தலைவர் மைனா

பிக் பாஸ் வீடு நேற்று நாமினேஷன், கேப்டன் பதவிக்கான போட்டி என அனைத்தையும் எதிர் கொள்ள போட்டியாளர்கள் தயாராக இருந்தார்கள். இதில் கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய மைனா நந்தினி, கதிர், தனலட்சுமி இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த போட்டியில் மைனா நந்தினி வெற்றி பெற்று இந்த வாரத்தின் கேப்டன் ஆனார்.

அழுது புலம்பிய தனம்

அழுது புலம்பிய தனம்

இந்த டாஸ்கில் தோற்றுப்போனதால் டென்ஷன் ஆன தனலட்சுமி, பந்து உருண்டுதான் போகணும் ஆனால், பந்து பறந்து போச்சு என்று தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வயித்தெரிச்சலில் கத்தினார். தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ளாத தனலட்சுமி, கேப்டன் டாஸ்க் நடப்பதற்கு முன்பே டீம் பிரிக்கிறாங்க, டீம் பிரிக்க நான் வரமாட்டேன் என்று அழுது புலம்பிகிறார்.

அடங்காத தனலட்சுமி

அடங்காத தனலட்சுமி

ஆயிஷா, ஷிவின், மைனா என அனைவரும் அவரை சமாதானப்படுத்தியும் தனலட்சுமியின் ஆத்திரம் தீரவில்லை. ஏமாத்தி ஜெயிச்சாங்க பந்து மேல பறந்து போச்சு, நான் மைனாவை ஒரு கேப்டனா மதிக்கவே மாட்டேன் என்றார். மேலும், நான் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால், எல்லாரையும் மாத்தி இருப்பேன், அது மிஸ்ஸாகி விட்டதே என படுக்கையில் படுத்துக்கொண்டு அந்நியன் பட விக்ரம் போல மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுங்க

என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுங்க

தலைவர் பதவிக்கான டாஸ்க்கிற்கு முன்பாகவே தனலட்சுமி நான் கேப்டன் ஆனால், அமுதவாணன்,ஜனனி நீங்க ரெண்டு பேரும் கிச்சன் டீம் போகவேண்டும் என்று முன்பே அவர்களிடம் பேசி பிளான் போட்டிருந்த நிலையில் தலைவர் ஆகாததால் என்ன செய்வது என தெரியாமல், என்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுங்க. என்னை தனியாக விளையாட விட்டு இருக்கலாம் என கேமரா முன் புலம்பி வருகிறார்.

இதெல்லாம் ரொம்ப தப்பு

இதெல்லாம் ரொம்ப தப்பு

தனலட்சுமியின் அட்டாகாசத்தை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப தப்பு இப்படி செய்யக்கூடாது, எல்லாத்துக்கும் ஓர் அளவு இருக்கு என்றும் ஏடிகே சொன்னது போல, தனம் இதே மாதிரி வெளியில் நடந்து கொண்டால், நிச்சயம் அடிவாங்குவாங்க, அசீமை எச்சரித்தது போல தனலட்சுமியை கமல் எச்சரித்தால் தான் அவர் சரிபட்டு வருவார் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X