Don't Miss!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அசீம் அமுதவாணனை அடித்தாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அசீம் ஒரு வலுவான போட்டியாளராக இருந்தாலும், சில நேரம் அவரின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
நேற்றைய எபிசோடில் அமுதவாணனை அடிக்க பாய்ந்து வீட்டிற்குள் ஒரு பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டார்.
இந்த சண்டையில் அமுதவாணனை அசீம் அடித்தாரா இல்லையா என்று பெரிய விவாதமே நடந்து வருகிறது.
எப்ப வீட்டை விட்டு போகப்போறே.. மாமியாரின் கேள்வியால் சஞ்சலமடையும் காவ்யா!

பிக் பாஸ் சீசன் 6
பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் ஆதிவாசிகளின் செல்வங்களை ஏலியன்ஸ் திருடி வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் யாரிடம் செல்வம் அதிகமாக இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அது மட்டும் இல்லாமல், அதிக செல்வத்தை வைத்திருப்பவர் நாமினேஷனிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

கேவலமா கேம் விளையாடுறீங்க
இதனால், கற்களை திருடுவதற்காக அதிரடி தகராறு நடக்கிறது. அப்போது, ஆதிவாசியான கதிரவனை அமுதவாணன் மடக்கிப் பிடித்து வைத்துக்கொண்டு அவரது கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டு விடுகிறார். இதனால், கதிருக்கு ஆதரவாக அசீம் அமுதவாணனிடம் இப்படியா கேவலமா கேம் விளையாடுவீங்க என்ற ஏகவசனத்தில் பேசினார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி இது பெரிய சண்டையாக வெடித்தது.

என்னை வெளியில் அனுப்புங்க
அதில் அசீம் தன்னை அடித்ததாக அமுதவாணன் வீட்டில் இருப்பவர்களிடம் கத்தி கூச்சலிட்டார். இதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே அசீமுக்கு எதிராக திரும்பி நீ என்ன ரௌடியா? வீட்டில் ரௌடித்தனம் பண்றீங்க என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி திட்டினார்கள். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக திரும்பியதால் கடுப்பான அசீம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போறேன்.என்னை வெளியே அனுப்பிடுங்க என்று பிக்பாஸிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார்.

மயங்கி விழுந்த அசீம்
இதையடுத்து,மிகுந்த மன உளைச்சலில் இருந்த அசீம் திடீரென மயங்கி விழுந்தார். மெடிக்கல் ரூமில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வந்த அசீம், அமுதவாணனை கட்டிப்பிடித்து தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது ரொம்ப தப்பு என்று கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டார்.

பூக்களை திருடினார்
உடல்நிலை சரி இல்லாததால், வீட்டிற்குள் படுத்திருந்த அசீம், தனம் அசந்து தூங்கிய நேரமாக பார்த்து குளத்தில் இருந்த அனைத்து பூவையும் எடுத்துச் சென்று ஒளித்து வைத்துவிட்டார். காலையில் குளத்தில் பூக்கள் இல்லாததை பார்த்து தனலட்சுமி ஆத்திரத்தில் கத்தினார். உடல் நிலை சரியில்லாத போதும் கேமுக்காக அசீம் விளையாடிய விதத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.