Bigg Boss Tamil 6 Eviction: முதல் போனியே உப்புமா மம்மி தான் போல.. டேஞ்சர் ஜோன் லிஸ்ட்டே மாறிடுச்சே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷன் யார் என்று கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் கடந்த சீசன்களில் எல்லாம் யாருக்கு குறைவான ஓட்டுக்கள் வந்ததோ அவர்கள் தான் வெளியேறினார்கள். (சில ட்விஸ்ட்டுகளும் அரங்கேறின)

இந்நிலையில், இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள் யார், வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்பது குறித்து இங்கே அலசுவோம்..

நாமினேட் ஆனவர்கள்

நாமினேட் ஆனவர்கள்

கடந்த அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. 2 வாரங்கள் வீட்டில் போட்டியாளர்கள் ஜாலியாகவும், சண்டை போட்டும் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர். மொத்தமாக உள்ள போட்டியாளர்களில் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முன்னுக்கு வந்த ரச்சிதா

முன்னுக்கு வந்த ரச்சிதா

அசீம் முதலில் அதிக வாக்குகளுடன் இருந்து வந்த நிலையில், பேச ஆரம்பித்தா காது ஜவ்வு கிழியுதுன்னு ரசிகர்கள் அவருக்கான ஓட்டுக்களை குறைத்து ரச்சிதாவுக்கு அதிகம் போட ஆரம்பித்து அவரை இந்த பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வந்து விட்டனர். கமல்ஹாசன் ஃபர்ஸ்ட் சேவ் ரச்சிதா என்று சொன்னால் போதும் ரொம்பவே அவர் சந்தோஷப்படுவார்.

பஸர் விக்ரமன் பாஸ்

பஸர் விக்ரமன் பாஸ்

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அரசியல்வாதி விக்ரமன் பஸர் அடித்தே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். ரச்சிதாவை தொடர்ந்து 2வதாக விக்ரமன் அதிக வாக்குகளுடன் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆடிய மாரி டான்ஸ் வேறலெவல் வெறித்தனமாக இருந்தது. டைட்டில் வின்னர் ஆரியின் ஆதரவும் விக்ரமனுக்கு அதிகமாகவே கிடைத்து வருகிறது.

இவங்களாம் சேஃப்

இவங்களாம் சேஃப்

விக்ரமனை தொடர்ந்து அதிக ஓட்டுக்களுடன் அசீம் உள்ளார். கடைசி இடத்தில் இருந்த குயின்ஸிக்கு திடீரென இளைஞர்களின் ஆதரவு கிடைக்க அவரும் மேலே வந்து விட்டார். ஆயிஷா, நிவாஷினி, தனலட்சுமி, ராம் ராமசாமி உள்ளிட்டோர் ரொம்பவே சேஃப் ஆன இடத்தில் உள்ளனர்.

இவங்களுக்கு டேஞ்சர்

இவங்களுக்கு டேஞ்சர்

ஷெரினா, ஷிவின், விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி ரொம்பவே குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். திருநங்கை போட்டியாளர் ஷிவினின் கதைக்கு பின்னர் கூட அவருக்கான ஆதரவு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஒன்றும் பெருகவில்லை என்றே தெரிகிறது. முன்னிலையில் இருந்த விஜே மகேஸ்வரி எல்லாம் டக்கென கடைசிக்கு வந்து விட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல் போனி

முதல் போனி

பிக் பாஸ் சீசன் 6ல் கொஞ்சம் ஓல்டு லேடி என்றால் அது நம்ம டான்ஸ் மாஸ்டர் சாந்தி தான். உப்புமா செய்து போட்டே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும், யாரும் அவருக்கு ஓட்டுப் போட்டு காப்பாற்றும் எண்ணத்திலேயே இல்லை என்பது தொடர்ந்து அவர் கடைசி இடத்தில் குறைவான ஓட்டுக்களுடன் இருப்பது தெளிவாக காட்டுகிறது. வயதான போட்டியாளர் என்கிற ரீதியிலும் வைத்து பார்த்தால் முதல் போனி அவராகத்தான் இருப்பார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

லீக் ஆகிவிடும்

லீக் ஆகிவிடும்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் நாளை காலை ஆரம்பமாகும், நாளை மாலைக்குள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் யார் என்பது உறுதியாகவே லீக் ஆகிவிடும். ஜிபி முத்து, தனலட்சுமி உள்ளிட்டோரும் தொடர்ந்து வீட்டுக்குப் போக வேண்டும் என அடம்பிடித்து வரும் நிலையில், இந்த வாரமே டபுள் எவிக்‌ஷன் பண்ணி அனுப்பி விடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்ற்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X