பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜிபிமுத்து...வந்ததுமே அலப்பறை தாங்கல!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் ஜிபி முத்து விருந்தாளியாக உள்ளே வந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ளதால், பெரிதாக எந்த டாஸ்கும் இல்லாமல் வீடே தூங்கி வழிந்து வருகிறது.

இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் இருக்கும் என்று பார்த்தால் பணப்பெட்டி வரவில்லை. இதற்கு பதிலாக நிகழ்ச்சியின் சுவாரியத்தை அதிகரிக்க போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 வீட்டிற்கு இந்த வாரம் முழுவதும் விருந்தாளிகள் வருகின்றனர். நேற்று முன் தினம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களின் விளையாட்டு பற்றிய நிறை குறைகளை எடுத்துரைத்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தைக் கூட்டினார்.

பிக் பாஸ் 6 வந்தார்

பிக் பாஸ் 6 வந்தார்

இதையடுத்து விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனா இருவரும் வந்திருந்தார்கள். விஜே பார்வதி வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வரப்போவதாக பேச்சுக்கள் வந்த நிலையில் நேற்று அவர் விருந்தினராக வந்திருந்தார். மேலும் அவர் ஒவ்வொரு போட்டியாளர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களின் குறைபாடுகள் சுட்டிக்காட்டினார். இறுதிப் போட்டி நெருங்கி வருவதால் இது அவர்களின் விளையாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

காஃபி போடட்டுமா

காஃபி போடட்டுமா

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஜிபி முத்து, மெட்டி ஒலி சாந்தி வந்துள்ளனர். சாந்தியை பார்த்ததும் மைனா ஓடி சென்று கட்டி அணைத்தார். இதையடுத்து, பேசிய பிக் பாஸ், முத்து திரும்ப நாங்க அனுப்பும் போதுதான் வெளியில் போக வேண்டும் என்று சொல்ல, நீங்க சொல்லாம நான் இனிமே போகமாட்டேன் வெளியில் அந்தபாடு பட்டு இருக்கேன் என்றார். இதையடுத்து, சாந்தி எல்லாருக்கும் காஃபி போடட்டுமா என்று கேட்க, காஃபி மட்டும் போடுங்க உப்பமா பண்ணீங்கனா அவ்வளவு தான் என்று கிண்டலாக சொல்கிறார் ஜிபி முத்து.

அசலும், ராபர்ட் மாஸ்டர்

அசலும், ராபர்ட் மாஸ்டர்

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில்,பெண் போட்டியாளர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டு கெட்ட பெயர் எடுத்த அசலும், ராபர்ட் மாஸ்டரும் விருந்தாளிகளாக வந்துள்ளனர். ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்குள் நுழைந்ததுமே கட்டிப்பிடித்து வரவேற்ற அமுதவாணன், உங்களின் சிம்மாசனத்தில் யாருமே உட்காரவில்லை என்று கூறினார். இதையடுத்து அசலையும், ராபர்ட் மாஸ்டரையும் அனைத்து போட்டியாளர்களும் வரவேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X