கடுமையான காய்ச்சல்.. விடாமுயற்சியுடன் டாஸ்கில் வென்று தலைவரான ஜி.பி.முத்து..மயங்கி விழுந்த ஜனனி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் 3வது ப்ரோமோவில் ஜிபிமுத்து வீட்டின் கேப்டனாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஆடல் பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது. 5 சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்கள் ஏற்கனவே இருந்த நிலையில், நேற்று வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி வந்துள்ளதால், தற்போது வீட்டில் 21 பேர் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6ன் முதல் கேப்டனாக ஜிபிமுத்து தேர்வாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது. நேற்று கமலுடன் காமெடியாக பேசி ரசிகர்களின் மனதை அள்ளிய ஜிபி முத்துவுக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்து மருந்துகொடுத்தனர்.

கடுமையான போட்டி
இதையடுத்து மதியம் வெளியான 2வது ப்ரோமோவில்,இந்த வார கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் சாந்தி, ஜனனி மாற்று ஜிபி முத்து கலந்து கொண்டனர் அதில் சாந்தியால் தாக்குபிடிக்க முடியாததால் அவர் டாஸ்கிலிருந்து விலகிவிட்டார் ஆனால், ஜி.பி. முத்துவும், ஜனனியும் கடுமையாக போட்டி நடப்பது போல இருந்தது.

தலைவரே.. தலைவரே
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமாவில், ஜிபி முத்துவைவை போட்டியாளர்கள் அனைவரும் தலைவரே.. தலைவரே என கிண்டலடித்து வருகின்றனர். அப்போது அழுதவாணன் தலைவரே... ஜெயிச்சா மீன் வாங்கிதரேன்... முட்டை வாங்கித்தரேனு சொன்னீங்களே என அவரை கிண்டல் அடிக்கிறார்.

மயங்கி விழுந்த ஜனனி
ஒரு மணி நேரம் அப்படியே இருந்ததனால், ஆனால், ஜனனியால் தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார். இதனால், அசீம் அவரை தூக்கிச் சென்று மெத்தையில் படுக்கவைத்து முதல் உதவி அளித்தார். இறுதியில் ஜி.பி.முத்து டாஸ்க்கினை வென்றார். இந்த டாஸ்க்கில் பங்குபெறுவதற்கு முன், ஜி.பி முத்துவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று அவருக்கு டிப்ஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும் இந்த டாஸ்க்கில் அவரின் விடாமுயற்சினால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஜிபிமுத்து மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











