வீட்டுக்கு போகணும்..சாப்பிடாமல் அடம் பிடிக்கும் ஜிபிமுத்து.. வெளியேறுகிறாரா?

சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் ஏற்கனவே உள்ளே இருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்.

எந்த சீசனிலும் இல்லாத அளவில் ஆரம்பத்தில் இருந்தே ஜிபி முத்துவிற்கு ரசிகர்கள் பேராதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், ஜிபிமுத்துவோ வீட்டுக்கு போக வேண்டும் என்று தூங்காமல், சாப்பிடாமல் அடம்பிடித்து வருகிறார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக ஜிபி முத்து அனைவர் இடத்திலும் ஆட்டம் பாட்டம் என்று கலகலப்பாக பேசிவந்தார். கடந்த சில நாட்களாக டல்லாகவே இருந்த ஜிபி முத்து கேமிரா முன் நின்று எனக்கு மனசு அழுத்தமா இருக்கு மனசு சரியில்லை, நேற்றிலிருந்து மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது. நான் மனம் திறந்து சொல்லிவிட்டேன். என் தம்பி ஆனந்திடம் நான் பேச வேண்டும். ஏதாவது வழி பண்ணுங்கள். என் மனசு மிகவும் பாதிக்கிறது என்றார்.

தம்பியை வரசொல்லுங்க

தம்பியை வரசொல்லுங்க

இதையடுத்து, பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு தனியாக அழைத்து, நீங்கள் வீட்டிற்கு செல்லும் முடிவில் உறுதியாக தான் இருக்கிறீர்களா? என்று கேட்க, ஜிபி முத்து ஆமாம் என்னால் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. என் தம்பியை வர சொல்லுங்கள் நான் அவரோடு சென்று விடுகிறேன். வீட்டு ஞாபகமாவே இருக்கு என் பையனை பார்க்க வேண்டும் என்று பச்சைக்குழந்தை போல அழுகிறார்.

ஆறுதல் கூறிய பிக்பாஸ்

ஆறுதல் கூறிய பிக்பாஸ்

இதையடுத்து ஜிபி முத்துவுக்கு ஆறுதல் சொல்லிய பிக் பாஸ், இந்த வீட்டில் உங்களின் நண்பர் யாரோ அவரிடம் மனம் திறந்து பேசுங்கள் அப்போது தான் மனசு ஆறுதலா இருக்கும், பிக் பாஸ் வீட்டில் நீங்கள் 100 நாள் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் இதனால், கவலையை மறந்து வீட்டில் இருங்கள் நான் மறுபடியும் பேசுகிறேன் என்றார்.

சாப்பிடாமல் அடம்பிடிக்கும் ஜிபி முத்து

சாப்பிடாமல் அடம்பிடிக்கும் ஜிபி முத்து

என்னத்தான் பிக் பாஸ் ஆறுதல் கூறினாலும், நேற்று இரவு முழுக்க ஜிபி முத்து தூங்காமல் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார். வீட்டில் முதல் ஆளாக எழுந்து அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்யும் ஜிபி முத்து,முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் இருக்கிறார். பல முறை ஹவுஸ்மேட்டுகள் அழைத்தும் அவர் சாப்பிட வரவில்லை. இதனால் ஜிபி முத்துவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X