பளிச் பளிச் மீம்ஸ்..ஜிபி முத்துவை பார்த்து வியந்த ரசிகர்கள்..இன்றைய கலாய் மீம்ஸ்!
சென்னை : டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, பிக் பாஸ் வீட்டில் நுழைந்து சும்மா மாஸ் காட்டி வருகிறார்.
ரக்சிதா மகாலட்சுமி,ஆயிஷா, மகேஷ்வரி, அசீம், மணிகண்டன்,அமுதவாணன் என தெரிந்த முகங்கள் பல இருந்தாலும் ஜிபி முத்துவுக்குத்தான் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது.
ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே அவரின் தீவிர ஆதரவாளர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜிபி முத்து
சோஷியல் மீடியாவில் பிரபலமான ஜிபி முத்து முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வீட்டை கலகலப்பாக மாற்றி வருகிறார். சோஷியல் மீடியாவில் கேமராவைப் பார்த்து திட்டுவது போல், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கேமராவைப் பார்த்து திட்டியும், பாட்டுப்படியும் அலப்பறை செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் ஜிபி முத்துவின் பிக் பாஸ் அலப்பறைகள் என்று வீடியோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குஷி ஜோதிகா போல
நடன மாஸ்டர் ராபர்ட் மற்றும் அமுதவாணன் இவரின் வெகுளித்தனத்துடன் விளையாடி வருகின்றனர். என்னத்தான் வயதில் மூத்தவராக இருந்தாலும் அனைவர் இடத்திலும் ஜாலியாக பேசிவருகிறார். ஆனால், ஹவுஸ்மேட்டுகளோ அவரின் வாயை கிண்டி அந்த வார்த்தையை வரவைக்க திட்டம் போடுவது போல தெரிகிறது. ஆனால், ஜிபி முத்துவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், குஷி ஜோதிகா போல மழையில் நனைந்து செம ஆட்டம் போட்டு முதல் நாளிலேயே ஸ்கோர் செய்துவிட்டார்.

இணையத்தில் பறக்கும் மீம்ஸ்
ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஜிபி முத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இணையத்தில் மீம்ஸ்கிரியேட்டர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதில் இந்த சீசன்ல பிக் பாஸ் பார்க்க காரணமே நீங்க தான் தலைவா என்பது போல மீம்ஸ் ஒன்று இணையத்தில் சுற்றி வருகிறது.

செத்தபயலே..நார பயலே
கமல் வரும் போதே உங்க ஊரு வார்த்தை எல்லாம் இங்கே பேசக்கூடாது என சொல்லி இருந்தார். ஆனால் தலைவனின் ஸ்பெஷலே அதுதானே இன்றைய எபிசோடில் செத்தபயலே..நார பயலே என பேசியதை பார்த்த ரசிகர்கள் தலைவன் ஃபாமுக்கு வந்து விட்டார் என்ற மீம்ஸ் தெறிக்க விட்டுள்ளனர்.

வலுவான போட்டியாளர்
இன்றைய எபிசோடில் திருப்பாச்சி விஜய் போல முகம் முழுக்க சந்தனத்தை பூசியிருந்தார். இதையடுத்து, அழகான ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டு பிக் பாஸ் வீட்டில் ஹீரோபோல ஜிபி முத்து வலம் வருகிறார். இந்த சீசனில் வலுவான போட்டியாளராக ஜிபி முத்து இருப்பார் என்பது மட்டும் கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











