Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. கமல்ஹாசனுடன் விஜய் வசந்த் சந்திப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு மநீம ஆதரவு?
- Lifestyle
உங்க எடை டக்குனு குறையவும் சீக்கிரம் தொப்பை காணமா போகவும்...இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
விக்ரமன் தான் ரியல் ஹீரோ... RIP விஜய் டிவி… ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!
சென்னை : அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பிக் பாஸ் ரசிகர்கள், RIP விஜய் டிவி என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஆட்டம் பாட்டத்துடன் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த சீசனின் போட்டியாளர்களாக இருந்த குயின்ஸி மற்றும் மணிகண்டன் மாமாகுட்டி பாடலுக்கு நடனமாடினார்கள். அதேபோல ஜிபி முத்து, தனலட்சுமி, ரச்சித்தா மகாலட்சுமி, ஏடிகே ஆகியோரும் டான்ஸ் ஆடி நிகழ்ச்சியை சுவாரசியமாக ஆக்கினர்.
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார், டைட்டிலை வெல்வது யார் என்பதை தெரிந்து கொள்ள, ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் சுறுசுறுப்பாக இருந்தனர். பிக் பாஸ் டைட்டில் நிச்சயம் விக்ரமனுக்குத்தான் கிடைக்கும் என்று சமூகவலைத்தளத்தில் அறம் வெல்லும் என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. அவருக்கு வாக்கு எண்ணிக்கையும் அதிகரித்தது.

மிகப்பெரிய தவறு
இதையடுத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் அசீமுக்கு வழங்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பாராத பிக் பாஸ் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்த 21 போட்டியாளர்களை ஒழுங்காக மதிக்க தெரியாத ஒருவரை வெற்றி பெறச் செய்து ஒரு பெரிய தவறை விஜய் டிவி செய்துவிட்டது என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த படம் ஒன்றே போதும்
அசீமின் வெற்றியால் கடுப்பான ஒரு இணையவாசி, நேற்று விழா மேடையில் விக்ரமன் தோளில் கமல் கைபோட்டு நின்று இருக்கும் போட்டோவை பகிர்ந்து, இந்த படம் ஒன்றே போதும் என்று பகிர்ந்துள்ளார். அதேபோல, அசீமுக்கு கமல் வெற்றி ட்ராஃபியை கொடுக்காமல், விக்ரமனை கொடுக்கவைத்து அழகு பார்த்தார். இது போதாதா மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு.

RIP விஜய் டிவி
சக மனிதனை மதிக்கத் தெரியாத ஒருவனின் கையில் வெற்றியை கொடுத்து, விஜய் பெரிய தவறை செய்துவிட்டது. இதனால், பலர், RIP விஜய் டிவி, RIP பிக் பாஸ் தமிழ், சங்கி அரசியல் தலையீட்டால் வெற்றியை இழந்த இரண்டு நேர்மையான போட்டியாளர்கள் என்று விக்ரமன் மற்றும் ஷிவினின் போட்டோவை பகிர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். உண்மையான போட்டியாளர்கள் விக்ரமன் மற்றும் ஷிவின் தான் என தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

எங்க மனசுல நீ ஜெயிச்சிட்ட
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த விக்ரமன் அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தி உள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு இணையவாசி, விக்ரமன் ஜாதி வெறி, மதவெறி, இனவெறி, பாலின வெறி ஆணாதிக்க வெறி இது எல்லாமே இருக்கிற நாட்டுல. இது எல்லாத்தையும் கிழிச்சு போடணும், ஒழியனும் சொன்னா எப்படியா நீ ஜெயிப்ப, எங்க மனசுல நீ எப்பவோ ஜெயிச்சிட்டயா என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், விஜய் டிவிக்கு எதிராகவும் , பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் Boycott ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.