Don't Miss!
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
எல்லாமே ஏமாற்று வேலை.. அறம் தோற்றது..தீமை வென்றது..அசீமின் வெற்றியால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று ரசிகர் ட்ரோல் செய்த நிலையில், அசீம் வெற்றி பெற்றுள்ளதால் நெட்டிசன்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், விக்ரமன், அசீம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டியாளராக மேடை ஏறி உள்ளனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு வெள்ளை நிற சண்டையும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஜெர்கினுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
பிக்
பாஸ்
அசீமுக்கு
ஆதரவளித்த
பிரசாந்த்
ரங்கசாமி..
காசு
வாங்கிட்டீங்களா
என
கலாய்க்கும்
ரசிகர்கள்!

கிராண்ட் பினாலே
பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்துப்போட்டியாளர்களும், கலக்கலாக உடை அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்கள். இதில் ராபர்ட் மாஸ்டர் கையில் கட்டுடன் வந்ததைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கமல் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் வெளியில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கேட்டறிந்தார்.

மாமாக்குட்டி பாடலுக்கு டான்ஸ்
இதையடுத்து, குயின்ஸி மற்றும் மணிகண்டா இருவரும் இனைத்து லவ் டுடே படத்தில் வரும் சொல்லுங்க மாமாக்குட்டி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடினார்கள். இதையடுத்து, இறுதிப்போட்டியாளர்களான விக்ரமன், அசிம், ஷிவினை வீட்டிற்குள் சென்று சந்தித்துப் பேசினார். இதில், 3 பேரும் 106 நாள்கள் வாழ்ந்த வீட்டை விட்டுப் போவது வருத்தமாக உள்ளது என்றனர். இதையடுத்து, மூன்று பேருக்கும் தனது கைப்பட எழுதியை கடிதத்தை கமல் பரிசாக கொடுத்தார்.

டைட்டில் வின்னர் அசீமா?
பிக் பாஸ் பினாலே ஒரு பக்கம் பிரம்மாண்டமாக சென்று கொண்டு இருக்க இணையத்தில், அசீம் டைட்டிலை வென்று விட்டதாக தகவல் பரவி, இணையத்தில் ஹாஷ்டாக் டிராண்டாகி வருகிறது. பலரும் அசீமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பல நெட்டிசன்கள் சகபோட்டியாளரை தரக்குறைவாக பேசி அவமதித்தவர் அசீம் அவர் எப்படி வெற்றி பெற முடியும் என்று கேட்டு வருகின்றனர்.

தவறான முன் உதாரணம்
பிக் பாஸ் பார்வையாளர்கள் பலர் அசீமுக்கு ரெட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இணையத்தில் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். அது மட்டுமில்லாமல் கமல்ஹாசனும், அசீமை கண்டபடி திட்டி உங்கள் மகனுக்காக நீங்கள் நிச்சயம் மாற வேண்டும் என்றார். ஆனால், கடைசி வரை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மற்றவர்களை அவமதித்துத் தான் வந்தார் அசீம். இப்படி பட்ட ஒருவரை வெற்றி பெற செய்தது தவறான முன் உதாரணமாகிவிட்டது.

அறம் தோற்றது.. தீமை வென்றது
அனைவரின் கருத்துக்கு மதிப்பளித்து, பொருமையுடனும், அமைதியுடனும் விக்ரமன் இருந்ததற்கு கிடைத்த பரிசு இதுதானா என்றும், எல்லாமே ஏமாற்று வேலை.. அறம் தோற்றது.. தீமை வென்றது என நெட்டிசன்ஸ் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.