Don't Miss!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- News
"மயக்க மருந்து" ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்.. டிக்கெட் பரிசோதகர் செய்த கொடுமை!
- Technology
அடுத்த ஆப்பு.. அதிக காசு கொடுத்தால் அதிக நன்மை! Elon Musk ஓபன்! ஷாக் ஆன ட்விட்டர் பயனர்கள்!
- Automobiles
ஏன்ய்யா... கார்கள் இறக்குமதிக்கு இவ்ளோ பணம் செலவு பண்றீங்க!! பாகிஸ்தானில் பொருளாதாரம் சரியாகாது போலயே!!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
அசீம் ரசிகர்களுக்கு அல்டிமேட்டாக வாழ்த்து சொன்ன நெட்டிசன்கள்... இதுக்குபேரு தான் மரண கலாய்
சென்னை: நேற்று நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6 இறுதிப் போட்டியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
விக்ரமன், ஷிவின், அசீம் என மூன்று பேரும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் சமவாய்புடன் போட்டியிட்டனர்.
அப்போதும் பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் வெற்றிப் பெற்றார்.
இந்த முடிவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஏற்க மறுத்ததோடு விஜய் டிவிக்கு எதிராகவும் கமெண்ட்ஸ் செய்து வரும் நிலையில், அசீம் ரசிகர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Bigg
Boss
Tamil
6:
பிக்
பாஸ்
டைட்டில்
வின்னர்
அசீமுக்கு
50
லட்சத்துடன்..
சொகுசு
காரும்
பரிசு!

அசீம் டைட்டில் வின்னர்
சென்னை: அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் அசீமின் பேச்சும், மற்றவர்களை தரக்குறைவாக நடத்தியதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அசீமின் வெற்றியை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

அசீம் மாதிரியே அமையட்டும்
டாஸ்க் நேரங்களில் சக போட்டியாளர்களை கொஞ்சமும் மதிக்காமல் மிக மலிவாக நடந்துகொண்டார் அசீம். ஒவ்வொரு வாரமும் மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக வைத்திருந்த அசீம், பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கே தகுதியில்லை என ரசிகர்கள் கூறிவந்தனர். ஒருகட்டத்தில் அசீம்க்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி அவரே டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அசீம் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ள நெட்டிசன்கள் அசீம் மாதிரியே எல்லாம் அமையட்டும் என வாழ்த்தியுள்ளனர்.

நெட்டிசன்களின் மரண கலாய்
டாக்டர் நாகஜோதி என்பவர் தனது ட்விட்டரில், "அசீம் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அசீம் போன்ற வாழ்க்கைத் துணையும் நட்புவட்டமும் சுற்றமும் அமைய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். அதேபோல், "விக்ரமன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் விக்ரமன் போன்ற வாழ்க்கைத் துணையும் நட்பு வட்டமும் சுற்றமும் அமைய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதரவும் எதிர்ப்பும்
இந்த டிவிட்டர் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், அவர் "அசீமால் அசீமுக்கு பாதிப்பு இல்லைல்ல அதான் அசீம் மாதிரி ஒருத்தர் அசீம் வாழ்க்கையில இருக்கணும்னு வாழ்த்துறேன், அப்போ தான் அசீம்களுக்கு கொஞ்சமவாது புரியும் தான் எவ்வளவு பெரிய அசீசீசீசீசீசீசீம் என்று" என விமர்சித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளின் உணமைத்தன்மையை உணராத அசீமின் ரசிகர்கள் மீண்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.