Bigg Boss 6 Tamil: தள்ளிப் போகிறதா பிக் பாஸ் சீசன் 6.. இந்த தேதியில் தான் ஆரம்பமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது முதல் ஆரம்பமாக போகிறது என்கிற தகவல் கசிந்துள்ளது.

5 சீசன்களையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் 6வது சீசனையும் தொகுத்து வழங்க போகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சிம்பு இந்த சீசனை தொகுத்து வழங்கவில்லை.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அடுத்த மாதம் அதகளமாக ஆரம்பமாக போகிறது. முதல் சீசன் முதல் 5வது சீசன் வரை இதுவரை அனைத்தும் ஏகப்பட்ட தடைகளை மீறி வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிலையில், 6வது சீசனை கமல்ஹாசனே மீண்டும் தொகுத்து வழங்க உள்ளார்.

விக்ரம் வெற்றிக்கு பிறகும்

விக்ரம் வெற்றிக்கு பிறகும்

விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகும் மீண்டும் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வருவது ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் 15 சீசன்களை தொகுத்து வழங்கும் நிலையில், கமல்ஹாசனும் அதே போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எந்த தவறும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிடி முதல் தர்ஷா குப்தா வரை

டிடி முதல் தர்ஷா குப்தா வரை

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன், குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்‌ஷன், நடிகை தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, பாடகி ராஜலக்‌ஷ்மி, சத்யா சீரியல் நடிகை ஆயிஷா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என யூகங்கள் கிளம்பி உள்ளன.

தாமதமாகிறதா பிக் பாஸ் 6

தாமதமாகிறதா பிக் பாஸ் 6

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு வார காலம் தாமதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் அக்டோபர் 9ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என தெரிகிறது.

 24 மணி நேரம் இருக்குமா

24 மணி நேரம் இருக்குமா

விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போல 24 மணி நேரமும் இருக்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பானால் விஜய் டிவியில் பார்ப்பவர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்து விடும் என்பதால், அதற்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X