அசீமுக்கு விவகாரமான சேக்ரிஃபைஸ் டாஸ்க்.. மீண்டும் முட்டிக்கொள்ளும் மகேஸ்வரி மற்றும் அசீம்!

சென்னை : அசீமுக்கு விவகாரமான சேக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுத்துள்ளதால், அனைத்து போட்டியாளர்களுடனும் அசீம் சண்டைபோட்டு வருகிறார்.

அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிய உள்ளது. பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இதில் யார் வெளியேறுவார் என்பதை தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் கூட சக போட்டியாளர்களுடன் அசீம் சண்டை போட்டு வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

மணிகண்டன், தனலட்சுமி, மெட்டிஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்சி போன்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்ஸ்குகளை செய்து வருகின்றனர். வெளியே இருக்கும் நிலவரம் குறித்து உள்ளே வந்தவர்கள் எதுவும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் வெளியில் அனுப்பிவிடுவேன் என ஆர்டர் போட்டுள்ளார் பிக் பாஸ்.

மூன்றாவது ப்ரோமோ

மூன்றாவது ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில், விஜே மகேஸ்வரி எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில், சேக்ரிஃபைஸ் டாஸ்க் 2.0 என்று கூறுகிறார். இதில், ஹவுஸ்மெட்டுகள் அனைவரும் கலந்து பேசி சேக்ரிஃபைஸ் டாஸ்க் வழங்க வேண்டும் என்கிறார். இதையடுத்து, அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்து விக்ரமனுக்கு க்ளீன் சேவ் செய்ய வேண்டும் என்றும், அசீம் சாரி அல்லது சுடிதார் ரெண்டில் ஏதோ ஒன்று போட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.

கிண்டலடிக்கும் பேன்ஸ்

கிண்டலடிக்கும் பேன்ஸ்

இதையடுத்து பேசிய அசீம், வீட்டிற்குள் வந்ததும் உங்க வேலையை ஆரம்பிச்சீட்டீங்களா என்று மகேஸ்வரியைப்பார்த்து கேட்க, வீட்டிற்குள் வந்ததே அதற்காகத்தான் என்கிறார். உடனே இதற்காகத்தான் வெளியில்போனீங்க என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார் அசீம். இதையடுத்து, அசீம் மற்றும் மகேஸ்வரியும் சண்டைபோட்டுக்கொண்டனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் அசீம், 105 நாள் வரைக்கும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாரு போல என்றும், அசீம் சண்டைபோடாத ஒரே ஆளு கமல் தான் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

உனக்கு வெட்கமாய் இல்லையா?

உனக்கு வெட்கமாய் இல்லையா?

முன்னதாக காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ரச்சிதா பற்றி நான் பேசுவதால், அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். இதனால், கடுப்பான ராபர்ட் மாஸ்டர் என்னைப் பற்றி மட்டும் பேசு, ஏன் அடுத்தவர் பொண்டாட்டியெல்லாம் சேர்த்து வைத்து பேசுகிறாய்? உனக்கு வெட்கமாய் இல்லையா என கேட்காக, அசீம் மற்றும் ராபர்ட் மாஸ்டருக்கும் இடையே சண்டை முற்றிக்கொண்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X