Don't Miss!
- Sports
ஐபிஎல் தொடர் மீது தான் ஆர்வம் இருக்கு.. இது நல்லது அல்ல.. இங்கிலாந்து ஜாம்பவான் வேதனை
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6 : விருந்தாளிக்கும் சேக்ரிஃபைஸ் டாஸ்க்… விருந்தாளியா வந்தது ஒரு குத்தமா!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது டாஸ்கில், உள்ளே வந்துள்ள விருந்தளிக்கும் சேக்ரிஃபைஸ் டாஸ்க் இருக்கு என்று சொல்லி பீதியை ஏற்படுத்தி உள்ளார் கமல்.
அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிய உள்ளது. பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
இதில் யார் வெளியேறுவார் என்பதை தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆணழகன் அஜித்.. ஷாலினி மடியில் எப்படி உட்கார்ந்து இருக்காரு பாருங்க.. டிரெண்டாகும் த்ரோபேக் பிக்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பெரிதாக எந்த டாஸ்கும் இல்லாததால், பிக்பாஸ் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தனலட்சுமி, மெட்டிஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்சி, ஷெரினா ஆகியோர் வீட்டிற்குள் வந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சக போட்டியாளர்கள், வீட்டில் இருக்கும் 7 பேருக்கு கடுமையான சேக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுத்தனர்.

சேக்ரிஃபைஸ் டாஸ்க்
இதில், விக்ரமன் ஒரு பக்கம் மட்டும் தாடி , மீசையை எடுக்க வேண்டும் என்றும் ஏடிகேவுக்கு தலை முழுவதும் மொட்டை அடித்துக்கொண்டு உச்சிதலையில் மட்டும் குடுமி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கதிருக்கு சட்டை மற்றும் பேட்டை கிழித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அசீமுக்கு சுடிதார் மற்றும் புடவை கட்டிக்கொள்ள வேண்டும் என்று சேக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் செய்யவில்லை.

வசமாக சிக்கிய விருந்தளிகள்
இன்றைய எபிசோடுக்கான கடைசி ப்ரோமோ சற்று முன்பு வெளியானது. இதில், வெளியில் இருந்து வந்திருக்கும் விருந்தளிகளுக்கு ஒரு சின்ன கேம், வந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கார்டனில் உங்காருங்க, இந்த ஏழு பேரும் நீங்க என்ன தியாகம் பண்ணலாம் என்பதை முடிவு செய்து உங்களிடம் சொல்லுவார்கள் என்று கமல் சொன்னதும் அனைத்து ஆடியன்சும் கை தட்டி அதைவரவேற்றனர்.

அவமானப்படுத்தினார்கள்
இதையடுத்து பேசும், அசீம், அவமானப்படுத்தும் வகையில் நடந்து இருக்கிறார்கள், அதற்காக நாமும் அப்படி செய்யலாமா என்றார். இதையடுத்து பேசிய விக்ரமன் அன்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார். அவங்க அப்படி செய்துவிட்டார்கள் என்பதற்காக நாம் எதையும் செய்ய வேண்டாம் என்று மைனா கூறுவது போல மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தியாகம் என்பது விரும்பி செய்வதாகும்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது கம்பர் சொன்னது, ஆனால் ஏன் கூடினோம், ஏன் பேசினோம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. தியாகம் என்பது விரும்பி செய்வதாகும், கேட்டு வாங்குவது தானம், வலிய புகுத்துவது அது வன்மம். இது மூன்றும் வேறு வேறு என்பதை வீட்டில் உள்ளவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார் கமல்.