சவுண்டு சரோஜா பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி...வந்ததும் வராததுமா அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா!
சென்னை : பிக் பாஸ் வீட்டிற்குகள் மா.கா.பா மற்றும் பிரியங்கா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளது, தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிவடைய உள்ளது. இதில், யார் டைட்டிலை வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள அனைத்துப்போட்டியாளர்களும் ஆர்வமாக உள்ளனர்.
இதில், விக்ரமன், அசீம்,ஷிவின்,கதிரவன்,மைனா டாப் ஐந்து இடங்களை பெறுவார்கள் என்று ரசிகர்கள் கணித்து இவர்களுக்கு வாக்கு அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பெரிதாக எந்த டாஸ்க்கும் இல்லாததால், நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் கூட்ட எவிக்டாகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ள நிலையில், ஜனனி, ரச்சித்தா மட்டும் இன்னும் வரவில்லை. இவர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

3வது ப்ரோமோ
இந்நிலையில் , இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், விஜய்டிவியின் சவுண்டு சரோஜா பிரியங்கா, வீட்டுக்குள் வரும்போதே ஹலோ மக்களே என்று சவுண்டு கொடுத்துக்கொண்டே உள்ளே வந்துள்ளார். பைனலுக்கு போகும் ஆறு ஃபைனலிஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள் என பிரியங்கா சொல்ல, அதை கேட்ட மா.கா.பா மைனா நீயும் ஃபைனலிஸ்ட்டா என ஆச்சிரயமாக கேட்டு மைனாவை கேலி செய்கிறார்.

அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா
இதையடுத்து, அசீம் நீங்கள் பாத்ரூமுக்குள் எதையோ எடுத்துட்டு போனீங்களே உண்மையா என்று கேட்டு அவரை அசிங்கப்படுத்தினார். பிரியங்கா இதை கேட்டதும், அசீம் பேய் அடித்தது போல திருதிருவென முழிக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா வந்ததுமே உங்க வேலையை ஆரம்பிச்சீட்டீங்களா என்றும், இன்னும் பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு என்று இன்றைய எபிசோடை பார்க்க தயாராகி விட்டனர்.

புதிய சீரியல்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவிலும் விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோ ஒளிபரப்பானது. மகாநிதி, சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த நடிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தங்கள் நடிக்க இருக்கும் சீரியல் பற்றி பேசினார்கள். அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வரும் 23ந் தேதியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய நேரத்தில் இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











