Don't Miss!
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- News
கிருஷ்ணகிரி மக்களின் நீண்டகால கனவு - நிறைவேற்றிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பழைய நியூஸ் பிக் பாஸ்... இதுல பிரோமோ வேற... பிக்பாசை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது பிரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர்.
இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், அசீம், மைனா, கதிரவன், ஷிவின், அமுதவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கதிர் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் வெளியேறி உள்ளார். பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இவ்வளவு குறைந்த பணத்துடன் வெளியேறிய முதல் போட்டியாளர் கதிர் தான்.
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் இவர் தானா?... அடுத்தடுத்த பிரோமோவால் லீக்கான சீக்ரெட்!

டைட்டில் வின்னர்
பிக் பாஸ் வீட்டில் முதலில் பணமூட்டை வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை பல லட்சம் மதிப்பிலான பணப்பெட்டிவைக்கப்பட்டது. விக்ரமன், அசீம் மற்றும் ஷிவினுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதால் இவர்கள் மூவரில் ஒருவருக்கு நிச்சயம் டைட்டில் கிடைக்கும். இதனால், இவர்கள் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு இல்லை.

வெளியேறிய போட்டியாளர்
ஆனால், அமுதவாணன் மற்றும் மைனாவுக்கு நான்கு அல்லது 5வது இடமே கிடைக்கும். இதை தெரிந்து கொண்ட அமுதவாணன் 13 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகமான பணத்துடன் வெளியேறிய போட்டியாளராக அமுதவாணன் இருக்கிறார். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

6 எனக்கு... 6உனக்கு
இந்நிலையில், இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் பணப் பெட்டியை யார் எடுப்பது என்பது பற்றி போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் 12லட்சம் வந்ததும் ஷிவின் மற்றும் அமுதவாணனும் "6எனக்கு 6உனக்கு வா எடுக்கலாம்" என பேசிக்கொள்கின்றனர். இறுதியில் அமுதவாணன் பணப்பெட்டிக்கு அருகில் சென்று நிற்கிறார்.

பழைய நியூஸ்
இந்த ப்ரோமோவை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர், அமுதவாணன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விட்டார். ஆனால், எதுவுமே நடக்காதது போல, பழைய செய்தியை இப்போது சொல்லுறீங்க என்றும், இதுல பிரோமோ வேறையா என்றும், எல்லாம் எங்களுக்கு தெரியும் பிக் பாஸ் கொஞ்சம் வித்தியாசமா யோசிங்க என்றும் நெட்டிசன்ஸ் இணையத்தில் ட்ரோல்செய்து வருகின்றனர்.