Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவின்.. போட்டியாளர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுத்தாரு தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் முன்னாள் போட்டியாளரான கவின் நுழைந்துள்ளார். அவர் வந்ததும் வராததுமாக போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளதால், வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், ஷிவின் ஆகியோர் உள்ளனர்.இதில் விக்ரமன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டைட்டில் தனக்கு கிடைக்கலைன்னா.. பிக் பாஸையே உழுது விட்ருவாறு உழுது.. அசீமை விளாசிய ஆர்த்தி!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6ல் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வந்த நிலையில், 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயுடன் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டிருந்து வெளியேறினார். நான் பைனலில் நிச்சயம் வெற்றி பெற மாட்டேன் என்பது எனக்கு தெரியும், எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் நிச்சயம் தேவை என்பதால் பணப்பெட்டியை எடுப்பதாக கூறியிருந்தார்.

வெளியேறிய மைனா
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் 103 நாட்கள் இருந்த நிலையில், மொத்தமாக 25,75,000 பணத்துடன் வெளியேறி இருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் உள்ளனர்.

மாஸ் என்ட்ரி கொடுத்த கவின்
இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டிற்குள் கவின், நடிகை அபர்ணா தாஸூடன் வந்திருந்தார். இங்கே இருந்து தான் என் பயணம் தொடங்கியது, கொஞ்சம் பேச ஆரம்பிச்ச எமோஷன் ஆகிடுவேன். உங்க 3 பேருக்கும் கொஞ்சம் டென்ஷன் இருக்கும் தான். ஆனால், ஜாலியா வாங்க அப்புறம் பாத்துக்கலம் என்றார். இதையடுத்து, கவின் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசினு தெரியல,நேற்று போச்சு, இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என்று பிக்பாஸ் கவினை கிண்டலடித்தார்.

டாடா படத்தில் கவின்
பிக் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கவின், தற்போது, கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அபர்ணா தாஸூடன் டாடா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 'எ சாங்' பாடல் மற்றும் டீசர் ரிலீசாகி வரவேற்பைப் பெற்றது. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளது. ஜென் மார்ட்டின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.