Don't Miss!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இத்தனை நாள் என்ன செஞ்சீங்க..வசமாக மாட்டிய அசீம்..கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில்,ஒவ்வொரு போட்டியாளரையும் பிக் பாஸ் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வலுவான போட்டியாளராக கருதப்பட்ட மணிகண்டன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன்,அசீம், ஷிவின்,கதிர்,அமுதவாணன், மைனா நந்தினி, ரச்சித்தா என 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
பிக்
பாஸ்
வீட்டில்
84
நாட்கள்
இருந்த
மணிகண்டன்
பெற்ற
சம்பளம்
எவ்ளோ
தெரியுமா?இத்தனை
லட்சமா?

பிக்பாஸ் சீசன் 6
அக்டோபர் 9ந் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக யாராவது உள்ளே வருவார்கள் ஆனால், இந்த முறை யாரும் உள்ளே வரவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 12வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது

பெஸ்டா என்ன செஞ்சீங்க..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், சரியான பாயிண்டை சொல்லும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்கிறார் பிக் பாஸ். இதையடுத்து மைனா, நான் இந்த வீட்டில் க்ரியேட்டிவிட்டியா நிறைய செய்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது குறுக்கிடும் பிக் பாஸ் உங்க பெஸ்ட் பாயிண்ட் என்ன...என்ன செஞ்சீங்க என கேள்வி கேட்டு மைனாவை திக்குமுக்காட வைத்துள்ளார்.

வெளுத்துவாங்கிய பிக் பாஸ்
இதையடுத்து, அசீம், நான் இந்த வீட்டில் எண்டர்டெயின்மென்ட் பண்ணி இருக்கேனு சொல்லி இருக்காங்க என்று சொல்ல, ஹவுஸ்மேட் சொன்னது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டு அசீமுக்கு சரியான நோஸ் கட் கொடுத்துள்ளார். அதன் பின் கதிரவன், அமுதவாணன்,ரச்சித்தா என ஒவ்வொருவரையும் என்ன செஞ்சீங்க என கேட்டு வெளுத்து வாங்கி உள்ளார் பிக் பாஸ்.

ஸ்டிரிக்ட் ஆபீசர்
இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்ஸ், பிக் பாஸ் சீசன் 1க்கு பிறகு பிக் பாஸ் வாய்சில் இந்த கெத்தை கேட்க முடிகிறது என்றும், அடேங்கப்பா... பிக்பாஸு ரொம்ப ஸ்டிரிக்ட்டான ஆபீசரா மாறிட்டாரு என்றும் ரசிகர்கள் பிக் பாஸை செல்லமாக கிண்டலடித்து வருகின்றனர்.

விட்டு கொடுத்த அசீம்
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத் தலைவருக்கான போட்டியில் ஏடிகே மற்றும் அசீம் இருவரும் போட்டியிடுகின்றனர். இருவரில் தலைவராக யார் தகுதியானவர்கள் என்பதை இருவரும் விவாதம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் ஏடிகே உங்களை விட எனக்கு ஃபேஷன்ஸ் அதிகம், உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று நான் நினைக்கிறேன் என்கிறார். அதற்கு பதிலளித்த அசீம், எனக்கு கோபக்காரன் என்கிற முத்திரை குத்துறது போல இருக்கு என்று கூறிவிட்டு. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நீங்கள் தான் இந்த வார கேப்டன் என்று ஏடிகேவுக்கு அசீம் கை கொடுக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.