Don't Miss!
- News
பக்காமூவ்.. மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை.. கர்நாடகா பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான்..காரணமே இதுதான்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோல்டன் டிக்கெட் யாருக்கு?போட்டியாளர்களிடையே வெடித்தது சண்டை..ரணகளமான வீடு!
சென்னை : டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற போட்டியாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் தொடங்கி உள்ளது. இதில், டிக்கெட் டூ ஃபினாலே கோல்டன் டிக்கெட்டை யார் வெல்வார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கி உள்ளது.
இந்த டிக்கெட்டை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதில், அசீம்,ஷிவின்,விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் இந்த டிக்கெட்டை பெற அதிக வாய்ப்பு உள்ளது.
தளபதி
டூ
சூப்பர்
ஸ்டார்
விஜய்...
சரத்குமார்
பற்ற
வைத்த
நெருப்பு...
கொதிக்கும்
ரஜினி
ரசிகர்கள்...

நாமினேஷனில் 7 பேர்
பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் இருக்கும் நிலையில் நேற்று பிக் பாஸ் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதிலளித்து அசீம் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து, விக்ரமன், கதிரவன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, அமுதவாணன் என ஏழு போட்டியாளர்களும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

டேஞ்சர் ஜோனில்
கடந்த வாரமே மைனா டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில் மணிகண்டன் வெளியேறினார். இதனால்,மைனா நந்தினி,கதிரவன் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரச்சித்தா நாமினேஷனில் இருந்தாலும், அவருக்கு ரசிகர்களின் பேராதரவு இருப்பதால், அவர் நிச்சயம் டாப் 5 லிஸ்டில் வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

டிக்கெட் டூ ஃபினாலே
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், ஷிவின் கணேசன் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இரண்டுக்கான விதிமுறைகளை படிக்கிறார். இதில், நேருக்கு நேர்.. இரண்டு பேருக்கு நடுவே... நடக்கப்போகும் விவாதம் என்று படித்து முடிக்கிறார். இந்த விவாதத்தில் அசீம் மற்றும் ரச்சித்தா இருவரும் விவாதம் செய்கின்றனர். இதில், அசீம், ரச்சித்தாவிடம் மக்களுக்காக என்ன என்டர்டெயின்மென்ட் பண்ணி இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதிலளித்த ரச்சித்தா, மக்களை என்டர்டெயின்மென்ட் பண்ணனும்னா நீங்கள் நீங்களா இருந்தாலே போதும் அசீம் என்கிறார்.

கோல்டன் டிக்கெட் யாருக்கு?
இதையடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். இந்த கோல்டன் டிக்கெட்டை பெறுபவர்கள் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்பதால், இந்த டிக்கெட்டை பெற கடுமையான போட்டி இந்த வாரம் முழுவதும் நடைபெறும். இதில் யார் வெற்றி பெருகிறார்களோ நேரடியாக இறுதி வாரத்திற்குள் சென்றுவிடுவார்கள்.