சத்தமே இல்லாமல் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..ஏடிகேக்கு கட்டம் சரியில்லை போல..நெட்டிசன்ஸ் கிண்டல்!
சென்னை : இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே அனைத்துப் போட்டியாளர்கள் குறித்தும் கருத்து கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளது. ஜனவரி 21ந் தேதி நிகழ்ச்சி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரலையிலும், விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நாமினேஷன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதிலளித்து அசீம் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து, விக்ரமன், கதிரவன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, அமுதவாணன் என ஏழு போட்டியாளர்களும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே
அதையடுத்து டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கி உள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவருக்கு இறுதி வாரம் வரை நாமினேஷேனில் சிக்காமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்று விடுவார்கள். இந்த கோல்டன் டிக்கெட்டை பெற போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகிறார்கள். நேற்று நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் 2ல் அசீம், ரச்சித்தாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு அவரை முகத்திற்கு நேராக பங்கம் செய்தார். அசீமின் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்த ரச்சித்தா இந்த டாஸ்கில் வெற்றி பெற்றார்.

எல்லாமே பர்சனல்தான்
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே மற்றும் மைனா இருவரும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து பேசி உள்ளனர். இதில் ஏடிகே இந்த வீட்டில் எல்லாருமே பர்சனலா எடுத்துக்குறாங்க. அசீம் எப்போதும் எல்லாத்தையும் பர்சனலாத்தான் எடுத்துப்பான். ஆனால், பேசும் போது மட்டும் நான் எதையும் பர்சனலா எடுத்துக்க மாட்டேன் என்று சொல்லுவான்.

கட்டம் சரியில்லை போல
அதேபோலத்தான் ரச்சித்தாவும் எல்லா விஷயத்தையும் பர்சனலா எடுத்துப்பாங்க ஆனால், வெளியில் காட்டமாட்டாங்க என்றார். மேலும்,எனக்கு விக்ரமனை சுத்தமா பிடிக்கவில்லை எல்லாத்துக்கும் குத்தம் சொல்லிக்கிட்டே இருக்காரு என்றார். இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் ஏடிகேக்கு கட்டம் சரியில்லை போல என கிண்டலடித்து வருகின்றனர். ஏடிகே இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











