பூமர் அங்கிள்னா என்ன...விக்ரமனை பங்கமாக கலாய்த்த அமுதவாணன்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், விக்ரமனை அமுதவாணன் பங்கமாக கிண்டலடித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கிற்காக பிக் பாஸ் மிகவும் கடுமையான டாஸ்குகளை ரூம் போட்டு யோசித்து உள்ளார்.

இதில் அனைத்து டாஸ்க்குகளையும் வெற்றி பெற்று யார் அந்த டிக்கெட்டுகளை வெல்லப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சைக்கிள் ஓட்டும் டாஸ்க்

சைக்கிள் ஓட்டும் டாஸ்க்

நேற்றைய எபிசோடில் சைக்கிள் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கில் வெற்றி பெறுவதற்கான போட்டியாளர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து சைக்கிளை ஓட்டினார்கள். இதில், போட்டி தொடங்கிய ஐம்பதாவது நிமிஷத்திலேயே முதல் ஆளாக கதிர் வெளியேறி 8வது இடத்தை பிடித்தார். அசீம் 7வது இடத்திலும், ஏடிகே ஆறாவது இடத்திலும், ஷிவின் 5வது இடத்திலும், 4வது இடம் ரச்சித்தா, 3வது மைனா, அமுதவாணன் இரண்டாவது இடமும், முதல் இடம் விக்ரமனும் பெற்றனர். இதையடுத்து, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் 7வது சுற்றில் பைபை இழுக்கும் போட்டி நடந்தது. இதில் அசீம் வெற்றி பெற்றார்.

விஷ பாட்டில் ஷிவின்

விஷ பாட்டில் ஷிவின்

இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருது கொடுக்கப்படுகிறது. இதில், விக்ரமனுக்கு அநியாயத்தை கண்டால் பொங்கும் விருதும், ஷிவினுக்கு விஷ பாட்டில் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

பூமர் அங்கிள்

பூமர் அங்கிள்

இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், பூமர் அங்கிள் கிரீடத்தை அமுதவாணன் விக்ரமனுக்கு கொடுத்திருக்கிறார். உங்களின் புரிதல் தவறு என்பதால், இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் நீங்கள் கொடுத்ததால் இதை தலையில் மாட்டிக்கொள்கிறேன் என்றார்.

உங்களின் புரிதல் தவறு

உங்களின் புரிதல் தவறு

பெண்ணுனா இந்த வேலைதான் பார்க்க வேண்டும் என்று சொல்லுவது, பையன் என்றால் அழக்கூடாது என்று சொல்லுவது எல்லாமே பூமர் அங்கிள் கணக்கில் தான் வரும். இப்படி நீங்க சொல்லும் எல்லாத்திற்கும் எதிரானவன் நான். இருந்தாலும் நீங்கள் கொடுத்த மரியாதைக்காக இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் பூமர் அங்கிள் இல்லை ஐம் மார்டன் என்றார் என்று அமுதவாணனின் முகத்திற்கு நேராகவே பேசினார் விக்ரமன். இதற்கு அமுதவாணன் என்னுடைய புரிதல் தவறா...இல்லை நான் சொன்னது தவறான என்று கேட்க உங்களின் புரிதலே தவறாக உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X