“புறம் பேசும் ஊர் கிழவி“ ஏடிகேவை பங்கமாக கலாய்க்கும் சுரேஷ் சக்கரவர்த்தி..சரியான பட்டம் தான்!
சென்னை : பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, புறம் பேசும் ஊர் கிழவி என்ற பட்டத்தை ஏடிகேவுக்கு கொடுத்து பங்கமாக கிண்டலடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டில், அசீம், விக்ரமன், அமுதவாணண், ஷிவின், மைனா, ஏடிகே என ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வந்துள்ளதால், ஆட்டம் சூடுபிடித்துள்ளது. இதில் கடந்த வாரம் சுறுசுறுப்பாக நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அமுதவாணன் சிறப்பாக அனைத்து கேம்களிலும் விளையாடி கோல்டன் டிக்கெட்டை வென்றார். இதனால் அவர் நேரடியாகவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெளியேறிய ரச்சித்தா
அமுதவாணன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றதால், அதிகவாக்குகளை பெற்ற போதும் ரச்சித்தா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். ரச்சித்தா மகாலட்சுமி நிச்சயம் டாப் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரச்சித்தா வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

என்ட்ரி கொடுத்த சுரேஷ் தாதா
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பரிசு கொடுத்து கிண்டல் அடித்துள்ளார். அதில், அமுதவாணனுக்கு சிடியை பரிசாக கொடுத்து இதில் பாட்டு இருக்கு என்று கூற மற்ற போட்டியாளர்கள் ஜனனி ஜனனி என்று பாடி காட்டுகின்றனர்.

ஊர் கிழவி ஏடிகே
இதையடுத்து, வெற்றிலை இடிக்கும் உரலை பரிசாகக் கொடுத்து, புல் தரையில் அமர்ந்து கொண்டு, ஊரில் கிழவிகள் புறம் பேசுவது போல பேசிக்காட்டினார். அப்போது , அமுதவாணனும் பதிலுக்கு ஏதோ பேச ஏடிகே ஊர் கிழவி என்றால், நீ ஊறுகாய் கிழவி என்று கிண்டலடித்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்த ப்ரோமோவைப் பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் ஏடிகேக்கு சரியான பெயர் தான் என்று கூறி வருகின்றனர்.

இந்த சீசனின் கடைசி நாமினேஷன்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 6ன் இந்த வாரத்திற்கான கடைசி நாமினேஷன் நடைபெற்றது. அதில்,மைனா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் அசீமை நாமினேஷன் செய்துள்ளனர். ஆனால், அசீம் நான் விக்ரமனை நாமினேட் செய்ய மாட்டேன் ஏன் என்றால் அவருக்கு என்னைவிட பொறுமை அதிகம் என்றார்.


Click it and Unblock the Notifications











