நான் கோவக்காரன் தான் மோசக்காரன் இல்ல..நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டாம்..அசீமை மட்டம் தட்டிய கமல்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரண்டு நாளாக சும்மா தாறுமாறாக சென்று கொண்டிருக்கிறது. நம்ம ஆண்டவர் சாட்டை எடுத்து உலகத்தை திருத்து என்பது போல போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் நிற்கவைத்து கேள்வி கேட்டார்.

பிக் பாஸ் வீட்டில் போன வாரத்தில் நடந்த பல சம்பவங்கள் காரணமாக போட்டியாளர்கள் பலரின் உண்மையான முகம் வெளியில் தெறியவந்துள்ளது.

அதில் ரசிகர்கள் பலர் இவரை வெளியேற்ற வேண்டும் என்று கூறி அசல் கோலாருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்ததால் அவர் வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன்

பிக்பாஸ் சீசன்

பிக் பாஸ் ரசிகர்கள் கமல்ஹாசன் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிக்காக காத்திருப்பார்கள். வாரம் முழுவதும் வீட்டில் என்னென்ன பிரச்சனை நடக்கிறதோ அதை அலசி ஆராய்ந்து, போட்டியாளர்களை சும்மா வெளு வெளுவென வெளுத்துவிடுவார். இதனால், ரசிகர்கள் கமல் வரும் நாளுக்காக காத்திருப்பார்கள்.

இவ்வளவு கோவக்காரரா

இவ்வளவு கோவக்காரரா

ஆனால்,கடந்த சீசன்களில் எத்தனையோ சண்டை வந்த போதும், மழுப்பலாக பேசி விட்டுபோனதால், நெட்டிசன்களும் கமல்ஹாசனை ட்ரோல் செய்தனர். ஆனால், சனிக்கிழமை எபிசோடில், வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என அனைவரையும் சரமாரியாக கேள்வி கேட்டார். இதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள், ஆத்தாடி இவரு இவ்வளவு கோவக்காரருனு தெரியாமல் போச்சே என நிச்சயம் மனதிற்குள் நினைத்து இருப்பார்கள்.

செம கிழிகிழி

செம கிழிகிழி

குறிப்பாக அசீமை சும்மா கிழி கிழி என கிழித்து விட்டார். கடந்த வாரமே ஆயிஷாவை வாடி.. போடி என்று பேசியதற்கே அவருக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், அசீம் தாமாக முன் வந்து, நான் செய்தது தவறுதான், இந்த வீட்டிலிருந்து நான் போகும் போது கோவத்தைவிட்டு விட்டு போக நினைக்கிறேன் என்றதால் கமல் அவரை மன்னித்தார். ஆனால், இந்த வாரம், அசீமை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

சரியான நோஸ்கட்

சரியான நோஸ்கட்

நேற்றைய எபிசோடில் இந்த வீட்டில் நோகாமல் நுங்கு சாப்பிடுவது யார் என கமல் கேட்டார். இதற்கு பதில் அளித்த அசீம், இந்த வீட்டில் அப்படி இருப்பது கதிர் தான், அவர் தான் எந்த பிரச்சனை வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றார். ஆனால், என்னைவிட மோசக்காரன் இல்லை நல்லவன் தான்.. நான் கோவக்காரன் தான், ஆனால் மோசக்காரன் இல்ல சார் என்றார். உடனே குறுக்கிட்ட கமல், நீங்கள் எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம், நீங்கள் விளக்கம் நல்லா கொடுக்குறீங்க ஆனால்,அதை நம்புறமாதிரி இல்லை. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்று சரியாக நோஸ் கட் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X