கோபப்படக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு...தனலக்ஷ்மிக்கு சரியான நோஸ்கட் கொடுத்த கமல்ஹாசன்!

சென்னை : கடந்த வாரம் தனலட்சுமியை பாராட்டிய கமல், அந்த வாரம் அவரை வச்சு செய்துள்ளார்.

போனவாரம் பொம்மை டாஸ்கின் போது அசீம் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தை கமல் கடுமையாக கண்டித்தார். அசீம் உங்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டேன், உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் மகனுக்கான கண்டிக்கிறேன் என்று சும்மா வெளுவெளுனு வெளுத்துவிட்டார்.

அதே நேரம், குறும்படம் போட்டுக்காட்டி தனலட்சுமியை பாராட்டி இருந்தார். கமல் பாராட்டி விட்டதால், தான் செய்வதுதான் சரியென நினைத்துக்கொண்டு ஓவர் ஆட்டம் போட்டு வந்த தனலட்சுமிக்கு சரியான குட்டுவைத்தார்.

சேனலாக மாறிய வீடு

சேனலாக மாறிய வீடு

பிக் பாஸ் பாஸ் வீடு கடந்த வாரம் சேனலாக மாறியது. இதில் போட்டியாளர்கள் அந்த டிவி, இந்த டிவி என இரண்டு டீமாக பிரிந்து செயல்பட்டனர். இதில் டீம் பிரிக்கும் போதே அசீம் மற்றும் தனலட்சுமிக்கும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, விவாத மேடையின் போது ஒரே டீமாக இருந்த போதும் தனலட்சுமி அசீமிடம் ஒத்துப்போகாமல் முன்பு நடந்த சண்டையை மனதில் வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்.

அசீம்,மகேஸ்வரி சண்டை பஞ்சாயத்து

அசீம்,மகேஸ்வரி சண்டை பஞ்சாயத்து

அதேபோல, அசிமிற்கும் மகேஸ்வரிக்கும் இடையே பிரேக்கிங் நியூஸ் எழுதியதில் சண்டை ஏற்பட்டது. அப்போது, உனக்கு ஜட்ஜ்மெண்ட் பண்ணவே தெரியல, அந்த விஷயத்துல நீ ஜீரோ என்று அசிமும் பதிலுக்குப் பொரிந்து தள்ளினார். இந்த சண்டை குறித்து பேசிய கமல், அனைவரும் அசீமை உசுப்பேத்தினாலும், சள்ளை மீன் போல சாப்பிட்டுவிட்டு கடந்து விட்டார் என அசீமை பாராட்டினார்.

தனலட்சுமியை வறுத்தெடுத்த கமல்

தனலட்சுமியை வறுத்தெடுத்த கமல்

இதையடுத்து, தனலட்சுமி பக்கம் திரும்பிய கமல், தனலக்ஷ்மி வீட்டில இருக்கிறவங்க உங்க கிட்ட ஒரு கருத்தை சொல்ல தயங்குகிறாங்க என்பது உங்களுக்கு புரியுதா? நீங்க கோபப்படுறீங்க என்று யாரு சொன்னாலும் அதை சொல்ல நீங்க யாரு என்று கேட்கிறீங்க. கோபப்பட்டதை சொன்னாலும் தப்பு சொல்லலை என்றாலும் தப்பு என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க பார்வையாளர்கள் கை தட்டினர்.

அசீம் மாறியிருக்கிறார்

அசீம் மாறியிருக்கிறார்

தனலட்சுமி அசீமாக மாறிவருகிறீர்கள். ஏன் திடீரென கூடுவிட்டு கூடு பாயுறீங்க நீங்க நீங்களா இருங்கள் என்று தனலட்சுமியை வச்சு செய்தார் கமல். அசீமை இந்த வாரம் திட்டாதது பலருக்கு கோவமாகக்கூட இருக்கலாம் இருந்தாலும், நான் சொன்னதை கேட்டு அவர் மாறியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என அசீமை வெகுவாக புகழ்ந்த கமல்ஹாசன், அசீம் நீங்கள் காப்பாற்றப்படுகிறீர்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X