இந்தியன் தாத்தாவாக மாறிய கமல்...மிரண்டுபோன போட்டியாளர்கள்..இனி திருந்துவாரா அசீம்!

சென்னை : இந்தியன் தாத்தாவாக மாறி கமல்ஹாசன் போட்டியாளர்களை நேற்று கிழிகிழியென கிழித்துதொங்கவிட்டார்.

இதனால், போட்டியாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு திருதிருவென முழித்துக்கொண்டு இருந்தனர்.

நேற்றைய எபிசோடு தாறுமாறா சும்மா தரமா இருந்தது என இணையத்தில் கமலஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொம்மை டாஸ்க்

பொம்மை டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க்கில் பலவிதமான சண்டைகள், தள்ளுமுள்ளுகள், அழுகைகள் என பல நடந்தன. இதில், தனலட்சுமி ஷெரினா, நிவாஷினியை தள்ளிவிட்டதாக கூறி அசீம், அவரை நீ எல்லாம் ஒரு பொண்ணா.. அறிவு இல்லையா என அடுக்கடுக்காக திட்டினார். அமுதவாணன், ஷிவினை கிண்டல் அடித்து பேசியது போன்ற பல விவகாரங்களால், பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது.

தரமான குறும்படம்

தரமான குறும்படம்

இந்த வாரத்தின் பல பஞ்சாயத்தை கையில் எடுத்துக்கொண்டு வந்த கமல், ஒவ்வொருவரையும் உண்டு இல்லை என்று செய்து விட்டார். டால் ஹவுஸ்க்குள் செல்லும் போது ஷெரின் கீழே விழுந்தது தொடர்பாக அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சண்டையை விரிவாக விசாரித்த கமல், குறும்படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை அனைவருக்கும் போட்டுகாட்டினார்.

மன்னிப்பு கேட்ட அசீம்

மன்னிப்பு கேட்ட அசீம்

அதில், ஷெரினாவை யாரும் தள்ளிவிடவில்லை, அவரே விழுந்துவிட்டது தெரியவந்ததை அடுத்து, அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கவைத்தார். ஒருவர் மீது பழிசொல்வதற்கு முன்பு உண்மை என்ன என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். இங்கே குறும்படம் இருந்ததால் ,போட்டு காட்டிவிட்டேன் வாழ்க்கையில் குறும்படம் போட்டுகாட்ட முடியாது என அனைவருக்கும் சவுக்கடி கொடுத்தார்.

மக்கள் மாற்றுவார்கள்

மக்கள் மாற்றுவார்கள்

அதோடு நிற்காமல், அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன் உங்களின் செயலைப் பார்த்துதான் உங்களின் மகன் வளருவான் அவனுக்காக கண்டிக்கிறேன். ஷிவினை கேலி செய்யும் வகையில் கைதட்டி பேசியதை நான் கண்டிக்கிறேன். இனியும் நீங்கள் மாறவில்லை என்றால் மக்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள் என அசீமின் முகத்திரையை கிழித்தார்.

சாமி ஆடிய கமல்

சாமி ஆடிய கமல்

அடுத்ததாக ஷெரினா பக்கம் திரும்பிய கமல், ஷெரினா உங்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால் விளையாடாமல் இருந்து இருக்கலாம், ஆனால், தேவைப்படும் நேரத்தில் அதாவது அசீம் உங்கள் மீது மொத்த வெயிட்டையும் போட்டு உங்காரும் போது உங்களுக்குன ஒன்றும் ஆகவில்லை. ஆனால், மற்றவர்கள் தடுக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறதா என கேட்டு மனுஷன் நேற்று சும்மா சாமி ஆடிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டியாளர்களுக்கு சாட்டையை எடுத்து வெளுத்துவிட்ட கமல்ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X