திடீரென கண் கலங்கிய கமல்..உறைந்து போன போட்டியாளர்கள்.. என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது அம்மா, அப்பாவை நினைத்து கண்கலங்கினார்.

பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து சில நாட்களிலேயே சண்டைகள், சர்ச்சைகள் ஆரம்பமானது. எனவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்க்க வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த நிலையில், இந்த வாரம் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல் கூறிய போதும். இந்த வாரம் டாஸ்கில் யாரும் அவ்வளவு கவனம் செலுத்தாததால், இந்த வார டாஸ்கே செம மொக்கையாகவே இருந்தது. இதையடுத்து,நேற்று ராம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

யாரை மிஸ் பண்றீங்க

யாரை மிஸ் பண்றீங்க

இதையடுத்து, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல், விஸ்வரூபம் கெட்டப்பில் வந்திருந்தார். வந்ததுமே, ஹவுஸ்மேட்களிடம் நீங்கள் வீட்டை விட்டு வந்து 60 நாட்களுக்கு மேலாகி உள்ளதால், நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஷிவின், என் அம்மா என்ன பழக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தாங்களோ அப்படித்தான் இந்த வீட்டில் இருக்கிறேன். இந்த வீட்டில் நான் இருப்பதைப்பார்த்து அம்மா சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

அம்மாவை நினைத்து உருகிய அசீம்

அம்மாவை நினைத்து உருகிய அசீம்

அதையடுத்து பேசிய அசீம், அம்மா சமைத்து வைத்துக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். சாப்பிட வரேன் என்று சொல்வேன் ஆனால், போக மாட்டேன். ஆனால், இங்கு சாப்பாட்டுக்கும், டீக்கும் அலையும் போதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது என்றார். இதேபோல, பலரும் தங்களின் அம்மா அப்பா குறித்து உருக்கமாக பேசினர்

கண்கலங்கிய கமல்

கண்கலங்கிய கமல்

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், அம்மா அப்பா பத்தி பேசுனீங்க... இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்துவிடுவோம். அப்படி ஒரு குழந்தைதான் நான், எனகண்கலங்கி பேசிய கமல், அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களை பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு என்றார். கமல் கண்கலங்கியதைப்பார்த்து ரசிகர்களும் கலங்கிப்போய், அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X