அசீமுக்கு ஓவர் திமிரு..வெளியில இப்படி பேசியிருந்தா அடிவாங்கி இருப்பான்..டென்ஷனான மகேஸ்வரி!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல், இந்த 6வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் தினமும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழக்கமாக வார கடைசி நாட்களில் வந்து சாட்டையை சுழற்றும் ஆண்டவர், நேற்று அசீமுக்கு பல அறிவுரைகளை கூறினார்.

பிக் பாஸ் சீசன் 6ல்
பிக் பாஸ் சீசன் 6ல் டீக்கும் சாம்பாருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் அசீம், ஆயிஷாவை நீ இந்த இடத்தில் இருக்க தகுதியே இல்லை என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது ஆசீம், ஆயிஷாவை போடி வாடி என்று ஒருமையில் பேசினார். அதே போல, விக்ரமனையும் தரக்குறைவாக பேசியிருந்தார்.

அசீமுக்கு ரெட் கார்டு
இதையடுத்து, நேற்றைய எபிசோடில் இந்த வீட்டில் யாருக்கு ரெட் கார்டு கொடுப்பீர்கள் என கேட்டார். தனலட்சுமி , அசல் கோலாரை தவிர மற்ற அனைவரும் அசீம் பேசியது சரியில்லை, மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார், கண்ணியம் தவறி விட்டார் என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்தனர்.

பகிரங்கமாக மன்னிப்பு
இதையடுத்து, பேசிய அசீம், அடிச்சாக்கூட மறந்துவிடும் ஆனால், வார்த்தையால் திட்டினால் மறக்காது, நான் தவறாக பேசியதற்கு மன்னித்துவிடுங்கள். இந்த ரெட் கார்டை என் வெற்றிக்கான படிகட்டாக பார்க்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே கோபம் அதிகமாக வரும், அதை குறைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

அசீமுக்கு ஓவர் திமிரு
அசீம் மன்னிப்பு கேட்டதால், இந்த வாரம் அவரை மக்கள் காப்பாற்றி இருக்கிறார்கள் என்றார். அதன்பின்னர், ஒவ்வொருவரிடமும் சென்ற அசீம் நான் பேசியது உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்து இருக்கும் மன்னித்துவிடுங்கள் என கேட்டார். ஏடிகேவிடம் பேசிய மகேஸ்வரி,அசீம் சரியா கேம் விளையாடுறான். அவருக்கு ஒவர் திமிரு, இங்கே பேசியது போல வெளியில் பேசியிருந்தா அடிவாங்கி இருப்பான், கோபத்துல பேசல வேணும்னுதான் பேசியிருக்கான், இனிமே நான் மாறிவிட்டேன், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் என்னை ஒதுக்குறாங்க என்று வேற மாதிரி கேம் விளையாடுவான் என்றார்.


Click it and Unblock the Notifications











