மகேஸ்வரியை பழிவாங்கத் துடிக்கும் தனம்..ஆரம்பித்தது போட்டி..இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு!
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 இரண்டு வாரங்களை கடந்து 3வது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற பொம்மை டாஸ்கில், மகேஸ்வரிக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை முற்றுகிறது.

நீயும் பொம்மை..நானும் பொம்மை
பிக் பாஸ் வீட்டில் நேற்று நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் தொடங்கி உள்ளது. இதில், ஒரு அட்டை பெட்டிக்குள் 19 பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதில், 19 பொம்மைகளில் போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருக்கும். அதை போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு அலமாரியில் வைக்க வேண்டும்.

குரூப் சேர்ந்தனர்
இந்த போட்டியில் மற்றவர்களுக்காக நாம் விளையாட வேண்டும் என்பதால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பேசி வைத்துக்கொண்டு பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடினர். இதில், ரச்சிதா,ஷிவின்,ஜனனி,அமுதவாணன், தனலட்சுமி குரூப் சேர்ந்து கொண்டு இவர்களுடைய பொம்மையை மட்டுமே எடுத்துக்கொண்டு ஓடியதால் சண்டை நடந்தது.

மாறி மாறி சண்டை
இதையடுத்து, மகேஸ்வரி என்ற பெயர் எழுதிய பொம்மையை தனலட்சுமி வைத்துக்கொண்டு அலமாரியின் உள்ளே வைக்காமல் இருக்கிறார். அதேபோல மகேஸ்வரி ஷிவின் என்று பெயர் எழுதிய பொம்மையை வைத்துக்கொண்டு, என் பெயர் எழுதிய பொம்மையை கொண்டு போய் அலமாரியில் வைத்தால், இதை நான் எடுத்து உள்ளே வைப்பேன் என்கிறார்.

டைரக்டா நான் நாமினேட் பண்றேன்
ஆனால், தனலட்சுமியோ, மகேஸ்வரியை எப்படியாவது நாமினேஷன் செய்து விடவேண்டும் என விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். மகேஸ்வரி, நீங்க உள்ள என் பொம்மையை வைக்கவில்லை என்றால் நான் அவுட் ஆகி விடுவேன் என கேட்டும் தனலட்சுமி பொம்மையை தராமல் இருக்கிறார். நேற்றைய ப்ரோமோவில், தனலட்சுமி "இது கேம் தான, நான் பெர்சனலா தான் பண்றேன்...டைரக்டா நான் நாமினேட் பண்றேன்" என்று தனலட்சுமி கூறியது போல ப்ரோமோ வெளியானது. ஆனால், அது எபிசோடில் வராததால் இன்னைக்கு சம்பவம் இருக்கு என்று ரசிகர்கள் இன்றைய எபிசோடை எதிர்பார்த்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











