For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மைனாவிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட விக்ரமன்..கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ..கண்ணாடி முன் வெறிப்பு!

  |

  சென்னை : நேற்றையை எபிசோடியில் மைனாவுக்கும் விக்ரமனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

  பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 3 வாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

  அசல் கோலாருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்ததால், நேற்று அசல் கோலாரு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

  ப்ரமோஷனுக்காக பல லட்சம் செலவு செய்த ராம்..பிக் பாஸ் ஷோவில் இதெல்லாம் இருக்கா..ஷாக்கான ரசிகர்கள்!ப்ரமோஷனுக்காக பல லட்சம் செலவு செய்த ராம்..பிக் பாஸ் ஷோவில் இதெல்லாம் இருக்கா..ஷாக்கான ரசிகர்கள்!

  பொம்மை டாஸ்க்

  பொம்மை டாஸ்க்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நீயும் பொம்மை ...நானும் பொம்மை டாக்ஸ் நடைபெற்றது. இதில் அசீம் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றார். அவரின் பேச்சு, சண்டை, கோபம், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. அதே நேரம் ரச்சிதா, அமுதவாணன், தனலட்சுமி, விக்ரமன் ஆகியோருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

  தரமான குறும்படம்

  தரமான குறும்படம்

  ஷெரினாவை தள்ளிவிட்டதாக கூறி தனலட்சுமியை அசீம் கண்டபடி பேசியதில் பலருக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவருக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு, அவர்களும் தனலட்சுமியை திட்டி வந்தனர். இதனால், பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை, சச்சரவு நிலவி வந்த நிலையில், இந்த சீசனின் முதல் குறும்படத்தை போட்டுக்காட்டி, அனைவர் வாயையும் அடைத்தார்.

  நோகாமல் நுங்கு சாப்பிடுவது யார்?

  நோகாமல் நுங்கு சாப்பிடுவது யார்?

  இதையடுத்து, நேற்றைய எபிசோடில் வந்ததுமே ஆயிஷாவிடம் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு அவரை நிகழ்ச்சி முடியும் வரை கதறவிட்டார் நம்ம ஆண்டவர். இதையடுத்து, இந்த வீட்டில் நோகாமல் நுங்கு சாப்பிடுவது யார்? என கமல் ஒரு கேள்வியை கேட்க, அதற்கு விக்ரமன், மைனா தான் அனைவர் இடத்திலும் ஜாலியாக பேசியே ஸ்கோர் பண்ணிவிடலாம் என்று பார்க்கிறார். பொம்மை டாஸ்க் அவர் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார்.

  விக்ரமனிடன் சண்டைபோட்ட மைனா

  விக்ரமனிடன் சண்டைபோட்ட மைனா

  இதனால், கோபத்தின் உச்சியில் இருந்த மைனா, கமல் போகும் வரை காத்திருந்துவிட்டு விக்ரமனிடம் சண்டை போடத் தொடங்கினார். நான் இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறேன், சமைக்கிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன். பொம்மை டாஸ்கில் நான் விளையாடதற்கு காரணம் ஆரம்பத்திலேயே நான் அவுட்டாகி விட்டதால், எனக்கு விளையாட ஆர்வம் வரவில்லை.

  பேசாதீங்க

  பேசாதீங்க

  இதற்காக நான் நோகாமல் நுங்கு சாப்பிடுகிறேனு சொல்லுவீங்களா? அப்போது எதுக்கு மற்ற நேரத்தில் என்னுடன் ஏன் பேசுறிங்க, இனிமேல் என் கூட பேசாதீங்க என விக்ரமனின் முகத்தில் அடித்தது போல பேசினார் மைனா. இதற்கு, விக்ரமன் பர்சனலா உங்கள எனக்கு பிடிக்கும் மைனா, ஆனால், நான் கேமை பற்றித்தான் பேசினேன் என்றார். ஆனால்,மைனா சமாதானமே ஆகாமல், இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டார். இதையடுத்து, விக்ரமன் பாத்ரூமில் நாம என்னடா பண்ணோம், கேமைத்தானே விளையாடினோம் என்பது போல கண்ணாடியை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே நின்றார்.

  English summary
  Bigg Boss tamil season 6 : Maina Nandhini fights with Vikraman..this the reason?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X