என்னை டார்க்கெட் பண்றீங்க..ஓவராத்தான் போறீங்க..விக்ரமனிடம் கொந்தளித்த மணிகண்டன்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் மணிகண்டனுக்கும் விக்ரமனுக்கும் சண்டை நடக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில், கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கின் போது நடந்த சண்டையால் வீடு களேபரமானது.

வாரா வாரம் பஞ்சாயத்து செய்ய வந்த கமல், அசீம், ஆயிஷா,ஷெரினா என ஒவ்வொருவரையும் தனித்தனியாக வெளுத்து வாங்கினார்.

மிரண்டுபோன போட்டியாளர்கள்

மிரண்டுபோன போட்டியாளர்கள்

கமல்ஹாசன் கொடுத்த சரியான ட்ரீட்மெண்டால் மிரண்டு போன போட்டியாளர்கள் இரண்டு நாளாக இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருந்தனர். போட்டியாளர்கள் அமைதியாக இருந்தா எப்படி என்று யோசித்த பிக் பாஸ் புதிதாக ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில், இந்த வாரம் வீடு டிவி சேனலாக மாறி உள்ளது.

சண்டையை கிளப்பிய தனலட்சுமி

சண்டையை கிளப்பிய தனலட்சுமி

இதையடுத்து, நேற்று விவாத மேடையில் அசீம்,தனலட்சுமி ஒரு டீமாகவும், ஷிவின் மற்றும் விக்ரமன் ஒரு டீமாகவும் இருந்தனர். இதில் ஆசீம் கூறிய கருத்தை எல்லாம் என்னால் கேட்க முடியாது தனலட்சுமி அசீமிடம் வாதம் செய்தார். இது விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சொல்லியும் தனலட்சுமி கேட்கவில்லை.

பர்சனல் வெஞ்சன்ஸ்

பர்சனல் வெஞ்சன்ஸ்

இதையடுத்து, தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், விக்ரமன், மக்களின் ஆதரவை பெறுவதற்காக நான் இப்படி பேசுவதாக மணிகண்டன் சொல்கிறார் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய மணிகண்டன், பர்சனல் வெஞ்சன்ஸ் எதுவுமே கிடையாது முதலில் நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது. நீங்கள் எப்போதுமே என்னைத்தான் டார்க்கெட் பண்றீங்க அப்போ நான் அதை பர்சனல் வெஞ்சன்ஸ் என்று எடுத்துக்கொள்ளட்டுமா? இது வந்து பர்சனல் வெஞ்சன்ஸ் கிடையவே கிடையாது என்று ஆத்திரத்தில் கத்துகிறார் மணிகண்டன்.

இன்னைக்கும் சம்பவம் இருக்கு

இன்னைக்கும் சம்பவம் இருக்கு

முன்னதாக காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், தனலட்சுமி எந்த குணத்தை மாற்றிக்கொண்டால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ஷெரீனா உன்னை யாராலும் சீக்கிரமாக ட்ரிகர் பண்ணமுடியும் என்றார், அதே போல உன்கிட்ட யாரும் பேசவே முடியாது என்கிற எண்ணம் இந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வந்து விட்டது என்று ஆயிஷா கூறியிருந்தார். காலையிலிருந்து வெளியான மூன்று ப்ரோமோவிலும் சலசலப்பு இருந்தால், இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் தயாராகி விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X