என் கூட ஆட ரெடியா? ராபர்ட் மாஸ்டருக்கு சவால் விட்ட சாந்தி.. இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு !
சென்னை : இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டருடன் மெட்டி ஒலி சாந்தி நடனப்போட்டி சவாலுக்கு அழைத்துள்ளார். இதனால், இன்றைய எபிசோடு சும்மா கிழிகிழினு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டியில் ஜி பிமுத்து விடாமுயற்சியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நாமினேஷன் ப்ராசஸ்
டாஸ்குகள் மட்டும் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இந்த வாரத்திலிருந்து நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது. அதன்படி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை காரணத்தை கூறி நாமினேஷன் செய்துள்ளனர். பெரும்பாலானோர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர்.

நடனப்போட்டி
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில்,சவால் விடும் போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி பிக் பாஸ் கூறுகிறார். இதையடுத்து, இதில் அசீம் ஷெரின் ஷாமையும், அமுதவாணன் நிவாஷினியையும், விஜே மகேஷ்வரி ஷிவினுடனும், மெட்டி ஒலி சாந்தி ராபர்ட் மாஸ்டருடனும் நடன போட்டிக்கு சவால் விட்டுள்ளார்.

இன்னைக்கு சம்பவம் இருக்கு
மெட்டி ஒலி சாந்தியின் ஆட்டத்தைப்பற்றி நமக்கு நன்றாகவே தெரியும், மெட்டி ஒலி சீரியலில் வரும் டைட்டில் பாடலான அம்மி அம்மி மிதித்து பாடலுக்கு ஆடி இன்று வரை மக்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்துள்ளார்.அதே போல ராபர்ட் மாஸ்டரும் நடனத்தில் சும்மா கலக்குவார், இருவருமே டஃப் போட்டியாளர் தான் இதனால், இன்றைய நிகழ்ச்சி சும்மா மிரட்டலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இது கதை சொல்லும் நேரம்
முன்னதாக காலையில் வெளியான ப்ரோமோவில், இது கதை சொல்லும் நேரம் என்ற டாஸ்கில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தது பற்றியும் அவர் முதலில் பேசத் தொடங்கினார். அப்போது சில ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கதை பிடிக்கவில்லை எனக்கூறி பஸ்ஸரை அமுக்கிவிடுகின்றனர். இதனால்,அவர் கண் கலக்கி கதறி அழுவது போல ப்ரோமோ வெளியானது.


Click it and Unblock the Notifications











