சரியான எச்சரிக்கை..கமலையும் மதிப்பதில்லை..பிக் பாஸையும் மதிப்பதில்லை..நெட்டிசன்ஸ் கருத்து!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் இன்று கண்டித்து இருக்கிறார்.
தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன் என கமல் எச்சரித்து இருப்பது தற்போது ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.
இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் ஆண்டவரே இப்படி இவங்களை வெளுத்துவிட்டால் தான் அடங்குவார்கள் என்று கூறிவருகின்றனர்.

சரியான எச்சரிக்கை
கமல் அப்படி சொன்னது தான் தாமதம், யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் லிஸ்டை வெளியிட்டு விட்டனர். இதில்,
ஷிவின் மற்றும் தனலட்சுமி - லேட்டா வராங்க
ஜனனி மற்றும் அமுதுவாணன் - மைக்கை மூடி, சைகை மொழியில் பேசுறாங்க
ஆயிஷா மற்றும் ஷெரினா -மலையாளத்தில் பேசுறாங்க
கமல் சொன்னதை ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

கமல் அதிரடி
கமல்ஹாசன் அதிரடியாக இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்காத போட்டியாளர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இன்னும் என்னை பைத்தியமாவே நினைச்சிட்டு இருக்கல என்று சந்தானத்தின் போட்டோவை போட்டு கிண்டலடித்துள்ளார்.
படம் 1: பிக் பாஸ் போட்டியாளர்கள் ரியாக்ஷன்......
படம் 2: கமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் பார்த்து அவருடைய ரியாக்ஷன்
https://twitter.com/SmitaSup/status/1589172545059581952?s=20&t=zTSf_yn-VHh8MAv_hSoPGw

பிக் பாஸுக்கும் மரியாதையே இல்லை
கமல்ஹாசனுக்கும், பிக் பாஸுக்கும் மரியாதையே இல்லை. கமல் சார் அவர்கள் இதை தொடர்ந்து செய்வார்கள். கடந்த வாரம் ஆயிஷாவும் ஷெரீனாவும் மலையாளத்தில் பேசியதற்காகவும், மற்றவர்கள் மைக் இல்லாமல் பேசியதற்காகவும் எச்சரிக்கப்படவில்லையா? எவ்வளவு காலம்தான் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருப்பீர்கள்? என பதிவிட்டுள்ளார்.

கமல் அதிரடி இது ரொம்ப நாளா நடக்குது
பிக் பாஸ் வீட்டில் இது ரொம்ப நாளா நடந்து வருகிறது. ஆனால் தாமதமான நடவடிக்கை உண்மையில் இதை பிக் பாஸ் தானே செய்ய வேண்டும் மணிகண்டன் கேப்டனாக இருந்த போது அவர் எந்த தலைமையையும் சரியாக செய்யவில்லை. இதற்கான அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு இணையவாசி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











